Tamilnadu
ரூ.97 கோடி- 56000 சதுர அடி: சென்னையில் மக்கள் வசதிக்காக புதிய கட்டடத்தை திறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.11.2025) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில், கட்டடம் மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் மற்றும் மேல்முறையீட்டு தீர்பாயத்திற்கு சென்னை, அண்ணா நகரில் 97 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டடத்தினை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் கட்டடம் மற்றும் மனை விற்பனை துறையை ஒழுங்குமுறை படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும், மனை, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான விற்பனையை வெளிப்படையான முறையில் உறுதி செய்வதற்கும், கட்டட மனை விற்பனை துறையில் நுகர்வோர்களின் நலனை பாதுகாப்பதற்கும், அவர்களின் குறைகளை விரைவாக தீர்வு காண்பதற்கும் தமிழ்நாடு கட்டடம் மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால், சென்னை, அண்ணாநகர் பகுதியில் 19,008 சதுர அடி கொண்ட இடத்தில், 77.60 கோடி ரூபாய் செலவில், 56,000 சதுர அடியில் கட்டப்பட்ட கட்டடம் இக்குழுமத்தால் வாங்கப்பட்டது. மேலும், 19.49 கோடி ரூபாய் செலவில் இக்கட்டடத்தின் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில்
பொதுமக்களுக்கான தகவல் மையம், வாகனம் நிறுத்துமிடம், வரவேற்பறை, காத்திருப்பு அறை, மின்தூக்கி வசதி, நவீன குளிர்சாதன வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.
Also Read
-
”மாற்றுத்திறனாளிகளை அவமதித்து பேசுவது தண்டனைக்குரிய குற்றம்” : அ.தி.மு.க நிர்வாகிக்கு தீபக் கண்டனம்!
-
“ரூ.42 கோடியில் 1,000 முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்!” : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்!
-
ரூ.50,000 உதவித் தொகை : ஆராய்ச்சியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட அமைச்சர் கோவி. செழியன்!
-
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரணதண்டனை... வங்கதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !
-
"4 ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்"- முதலமைச்சர் பெருமிதம்!