Tamilnadu
சிவகங்கை மாவட்டம் : 8,301 பயனாளிகளுக்கு ரூ.88.37 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (15.11.2025) சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, பாரி வள்ளல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அரசு விழாவில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பொதுப்பணித்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை ஆகிய துறைகளின் சார்பில் 17.86 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 23 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் மாங்குளம் கிராமத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கும் புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 8,301 பயனாளிகளுக்கு 88.37 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இவ்விழாவில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், கல்குறிச்சி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள நான்கு வகுப்பறைகளுடன் கூடிய ஆரம்ப பள்ளி புதிய கட்டடம், கல்லல் ஊராட்சி ஒன்றியம் என். வைரவன்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள புதிய கணினி ஆய்வக கட்டடம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் அரனையூர் மற்றும் கொங்கம்பட்டி இடையவலசை ஆகிய ஊராட்சிகளில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டடங்கள் என 1.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 4 புதிய திட்டப்பணிகளையும்,
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள பயனாளிகள் சிறப்பு தங்கும் விடுதியில் கட்டப்பட்டுள்ள முதல் தள கட்டடம், மானாமதுரை நகராட்சி காட்டு உடைகுளம் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாயக்கூட கட்டடம், அன்புநகர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள 2 புதிய கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், புதுவயல் பேரூராட்சிக்குட்பட்ட காமராஜ் நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாயக்கூடம், சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலக புதிய கட்டடம் என 2.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 5 புதிய திட்டப்பணிகைளையும்,
பொதுப்பணித்துறையின் சார்பில் திருப்பத்தூர் என்.எம்.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள 16 புதிய கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் வி.மலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள 5 புதிய வகுப்பறை கட்டடங்கள், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள 5 புதிய வகுப்பறை கட்டடங்கள், பெரியகோட்டையில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டடம், காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஒருங்கிணைந்த உடல் ஆரோக்கிய ஆய்வகம் என 7.09 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முடிவுற்ற 5 புதிய திட்டப்பணிகளையும்,
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் பீர்க்கலைக்காடு, மருதங்குடி, செம்பனூர், புதுவயல் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள், பச்சேரி, திருப்பாக்கோட்டை, தேரளப்பூர், சோதுகுடி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள புதிய துணை சுகாதார நிலைய கட்டடங்கள், மறவமங்கலத்தில் புதிய வட்டார பொது சுகாதார அலகு கட்டடம் என 6.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 9 திட்டப் பணிகளையும் என கூடுதல் மொத்தம் 17.86 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 23 முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் மாங்குளம் கிராமத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கும் புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
அரசு நலத்திட்ட உதவிகள்
இந்நிகழ்ச்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் 492 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள், 26 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகள், 31 பயனாளிகளுக்கு பல்வேறு சான்றிதழ்கள், 58 நபர்களுக்கு நலிந்தோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள் என 21.18 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும்,
வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு 2.12 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பவர் டிரில்லர் வேளாண் இயந்திரங்களையும், வேளாண்மை துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், மானாவாரி பகுதி மேம்பாடு, முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் உள்பட பல்வேறு திட்டங்களின் கீழ் 79 பயனாளிகளுக்கு 9.24 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் ஒரு விவசாயிக்கு தொழில் விரிவாக்க மானியமாக 30 இலட்சம் ரூபாய்க்கான காசோலையையும்,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம் மற்றும் 1 பயனாளிக்கு இயற்கை மரண உதவித்தொகை மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகைக்கான காசோலை, 20 பயனாளிகளுக்கு இ-பட்டாக்கள் என 4.75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 111 பயனாளிகளுக்கு 11.16 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரம், இலவச சலவை பெட்டி, கிறிஸ்துவ, முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்களின் சிறு தொழில் உதவித்தொகையும், கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் 25 பயனாளிகளுக்கு 17.08 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 50 சதவீத மானியத்தில் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை, மின்சாரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் உள்ளிட்ட நலத்திட்டங்களையும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு திருமணம், உயர்கல்வி, விபத்து மரணம், இயற்கை மரணம் உதவித்தொகை என 13.25 இலட்சம் ரூபாய்க்கான உதவித்தொகை காசோலைகளையும், வருமானம் ஈட்டுகின்ற தாய், தந்தை விபத்தில் இறந்ததால் பாதிக்கப்பட்ட 6 மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மொத்தம் 4 லட்சம் ரூபாய்க்கான வைப்புத் தொகை பத்திரங்களையும்,
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் 3.76 இலட்சம் ரூபாய்க்கான நிதி உதவி காசோலைகளையும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தின் சார்பில் 55 குழந்தைகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும்,
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 13 பயனாளிகளுக்கு நிரந்தர பந்தல், நிரந்தர மண்புழு உரக்கூடம், பண்ணை குட்டை, வெங்காய சேமிப்புக் கிடங்கு உள்ளிட்ட 7.92 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும், கூட்டுறவுத் துறையின் சார்பில் 59 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், 2,571 பயனாளிகளுக்கு 30.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பயிர் கடன், கால்நடை பராமரிப்பு கடன், சுய உதவி குழுக்களுக்கான கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடனுதவிகளையும், சுகாதாரத்துறையின் சார்பில் 60 கர்ப்பிணி தாய்மார்களுக்கு 1.35 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊட்டச்சத்து பெட்டகங்களையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் 15 பயனாளிகளுக்கு 46.50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணைகளையும், பால்வளத்துறையின் சார்பில் 25 பயனாளிகளுக்கு 14.58 இலட்சம் ரூபாய்க்கான கால்நடை பராமரிப்பு கடனுதவிகளையும், மகளிர் திட்டத்தின் சார்பில் 4,264 மகளிர் சுய உதவிக்குழு மகளிருக்கு 31.93 கோடி ரூபாய்க்கான வங்கிக்கடனுதவி இணைப்புகளையும், மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் 7 பயனாளிகளுக்கு 33.18 இலட்சம் ரூபாய்க்கான கல்வி கடனுதவிகளையும்,
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 336 பயனாளிகளுக்கு 2.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, நவீன செயற்கை அவயம், தக்க செயலிகளுடன் கூடிய திறன்பேசி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், காதொலி கருவி உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் விபத்து மரண உதவித்தொகை காசோலைகளையும் என மொத்தம் 8,301 பயனாளிகளுக்கு 88.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு நல திட்ட உதவிகளை வழங்கினார்.
Also Read
-
”பாஜகவும், அடிமைக் கூட்டமும் செய்திடும் SIR சூழ்ச்சியை முறியடிப்போம்” : துணை முதலமைச்சர் உதயநிதி சூளுரை!
-
CSK அணியின் அடுத்த கேப்டன் யார் ? அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட அணி நிர்வாகம் !
-
”எதிர்க்கட்சிகளுக்கு முதலீடுகள் மூலம் பதிலடி கொடுப்போம்” : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா !
-
நமக்காக உழைக்கும் தூய்மை பணியாளர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் இதுதான் - முதலமைச்சர் கூறியது என்ன ?
-
“அனைவருக்கும் பாடங்களை வழங்கியுள்ள பீகார் சட்டமன்றத் தேர்தல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!