
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வலை உணவு வழங்கப்படம் என்றும், அவர்களுக்கு ஓய்வறைகள் கட்டித் தரப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.
இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் 31,373 தூய்மைப் பணியாளர்கள் பயன்பெறும் வகையில், தூய்மைப் பணியாளர்களுக்கான முதலமைச்சரின் உணவுத் திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இன்று சென்னையில் தொடங்கி வைத்துள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் வரும் டிசம்பர் முதல் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்!

சென்னையின் 200 வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்களுக்கான ஓய்வறைகள் கட்டித் தரப்படும். தூய்மைப் பணியாளர்களின் மாண்பு காத்து, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அவர்களின் பிள்ளைகள் உயர் பொறுப்புகளில் அமர வேண்டும் என்பதே என் கனவு. அரசு தன் கடமையைத் தொடர்ந்து செய்து, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றும்.
மக்களும் Self Discipline கொண்டவர்களாக நடந்துகொண்டு பொது இடங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். நமக்காக உழைக்கும் தூய்மை பணியாளர்களுக்கு அதுதான் நாம் செலுத்தும் மிகப்பெரும் நன்றிக்கடன்!"என்று கூறப்பட்டுள்ளது.






