Tamilnadu
சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த பைக் : உயிர்தப்பிய நண்பர்கள் - நடந்தது என்ன?
புதுச்சேரி, சேந்தநத்தம் பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகளின் புதிய இரு சக்கர வாகனம் பழுதானதால் அதனை வில்லியனூர் பகுதியில் உள்ள சர்வீஸ் சென்டரில் விடுவதற்காக, தனது நண்பரை அழைத்துகொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
பின்னர் பழுதான வாகனத்தை சர்வீஸ் சென்டரில் விட்டு விட்டு, நண்பருடன் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். சிறிது தூரம் சென்ற பிறகு வாகனத்தில் இருந்து புகை வந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஜெயமணி உடனே வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
பிறகு இருவரும் வாகனத்தில் இருந்து கீழே இறங்கியவுடன் தீப்பற்றி எறிந்தது. இந்த விபத்தில் இதில் ஜெயமணி மற்றும் அவரது நண்பர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்தனர். ஆனால் இருசக்கர வாகனம் முழுவதும் தீயில் கருகியது.
இந்த விபத்து குறித்து வில்லியனூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு ஏற்பட்டு இந்த விபத்து நடந்திருக்கலாம் என தெரிகிறது. மேலும் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது.
Also Read
-
”NDA கூட்டணி அரசை பீகார் மக்கள் தூக்கி எறிவார்கள்” : பரப்புரையில் பிரியங்கா காந்தி MP பேச்சு!
-
தமிழ்நாடு முழுவதும் நவ.11 அன்று SIR-க்கு எதிராக ஆர்ப்பாட்டம்! : மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு!
-
”இது முட்டாள்தனம்” : ஹரியானா வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற பிரேசில் மாடல் Reaction!
-
நலம் காக்கும் ஸ்டாலின்: அரசு நடத்தும் 10 சிறப்பு போட்டிகள்.. எப்போது? யார் யார் பங்கேற்கலாம்? - விவரம்!
-
KGF நடிகர் திடீர் மரணம் : சக நடிகர்கள் இரங்கல்!