Tamilnadu
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
நடப்பு பருவமழையின் போது கழகத்தினர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்- நிவாரணப்பணிகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிட திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் உத்தரவுப்படி, நடப்பு பருவமழையின் போது கழகத்தினர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்- நிவாரணப்பணிகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிட முதன்மைச் செயலாளர் - நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் தலைமையிலும்,
இளைஞரணிச் செயலாளர் – மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையிலும் “சென்னை – தாம்பரம் - ஆவடி ஆகிய மாநகராட்சிகள் மற்றும் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட மாவட்டச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர்-துணைமேயர்கள், கவுன்சிலர்கள், மாநகர, நகர, பகுதி, வட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்” 22.10.2025 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகள், பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழகத்தைச் சார்ந்த நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் மேயர்கள், துணை மேயர்கள், கவுன்சிலர்கள், மாநகர-நகர- பகுதி-வட்டக் கழகச் செயலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்"என்று கூறப்படுகிறது.
Also Read
-
திருமணமான பெண்ணுக்கு 3 மாதங்களாக பாலியல் தொல்லை.. தவெக நிர்வாகிக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!
-
கொத்தடிமை ஒப்பந்தம்: ஆத்தூர் நகராட்சியின் அராஜகத்தை வேடிக்கை பார்க்கும் தவெக அரசுக்கு DMK IT WING கண்டனம்
-
த.வெ.க அரசு என்ன டாஷ் பண்ணிட்டு... : பழனி கோயில் நிலம் குறைகேடு விவகாரம் - DMK IT WING கண்டனம்!
-
மலையடிப்பட்டி அகழாய்வுப் பணிகளை தொடர வேண்டும் : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!
-
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அவலம் : ஒரே படுக்கையில் 4 நோயாளிகளுக்குச் சிகிச்சை!