Tamilnadu

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?

சென்னையில் அக்.28 அன்று தமிழ்நாடு தலைகுனியாது “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் நடைபெறும் என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,

கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திட்டமிடலின்படி வருகின்ற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை கழகம் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டை வளைத்திட முயற்சிக்கும் வஞ்சக சூழ்ச்சி கொண்ட ஒன்றிய பாஜக அரசின் முன்பு "தமிழ்நாடு தலைகுனியாது" என்ற பரப்புரையை கழகம் தொடங்கவுள்ளது. அதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழத்தின் வெற்றியை உறுதி செய்யும் வகையில்,

தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற முன்னெடுப்புக்காக “கழக மாவட்ட செயலாளர்கள் - மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - தொகுதி பார்வையாளர்கள் - தலைமை செயற்குழு உறுப்பினர்கள் - ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழக செயலாளர்களுக்கான பயிற்சிக் கூட்டம்” வரும் 28.10.2025 செவ்வாய்கிழமை, காலை 9.00 மணி அளவில் மாமல்லபுரம், ஈ.சி.ஆர்.சாலையில் உள்ள “கான்ஃப்ளூயன்ஸ் ஹால்” (Confluence Hall)ல் நடைபெறும்.

இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் - மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - தொகுதி பார்வையாளர்கள் - தலைமை செயற்குழு உறுப்பினர்கள் - ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Also Read: திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !