Tamilnadu

ஜி.டி.நாயுடு பாலம் : மோடிக்கு நன்றியா? - போலி பிரசாரம் செய்யும் பாஜக... அம்பலப்படுத்திய TN Fact Check!

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான நல்ல விஷயங்கள் பார்த்து பார்த்து அரசு செய்து வருகிறது. சொன்னதையும் தாண்டி சொல்லாத விஷயங்களையும் செய்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இப்படியான சூழலில் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய உரிய நிதியை முறையாக வழங்க தொடர்ந்து மறுத்து வருகிறது. எனினும் தடைகளை தாண்டி தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையானவற்றை செய்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஒன்றிய அரசு நிதி கொடுக்க மறுத்தபோதும், அதனை நிறுத்தக்கூடாது என்பதால் மாநில அரசின் நிதி மூலம் செய்யப்பட்டு வரும் ஒரு சில நலத்திட்டங்களுக்கும், ஒன்றிய பாஜக அரசு தான் காரணம் என்று பாஜகவினர் போலி பிரசாரம் செய்து வருகின்றனர்.

அப்படி ஒரு சம்பவம் தான் மீண்டும் தற்போது நிகழ்ந்துள்ளது. கோவையில் அமைக்கப்பட்டுள்ள ஜி.டி.நாயுடு மேம்பாலம் மாநில அரசின் நிதியில் இருந்து கட்டப்பட்டுள்ள நிலையில், பாஜகவினர் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

அதாவது தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் கோயம்புத்தூர், கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை ரூ.1,791 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மிக நீளமான 10.10 கிலோ மீட்டர் நீளம் கொண்ட நான்கு வழித்தட மேம்பாலத்திற்கு “ஜி.டி. நாயுடு மேம்பாலம்” என்று பெயர் சூட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேற்று (அக்.09) திறந்து வைத்தார்.

இப்புதிய உயர்மட்ட மேம்பாலம் மூலம், கோயம்புத்தூர் நகரில் இருந்து விமான நிலையத்திற்கு பயணம் செய்யும் நேரம் 45 நிமிடத்தில் இருந்து 10 நிமிடமாக குறைவதோடு, பெருவாரியான பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், ஊழியர்கள், அவசர சேவை பயனாளிகள், முதலீட்டாளர்கள் ஆகியோர் பயன்பெறுவர்.

இந்த மேம்பாலம் முழுவதும் மாநில அரசின் நிதியில் இருந்து கட்டப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு நிதி கிடையாது. இந்த சூழலில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டதற்கு காரணம் மோடி என்றும், அவருக்கு நன்றி என்றும் பாஜகவினர் போலி பிரசாரம் செய்து வருகின்றனர். இதனை TN Fact Check தெளிவுபடுத்தியுள்ளது.

Also Read: கரூர் விவகாரம்: அவதூறு பரப்பும் விதமாக பாஜக MP எழுப்பிய கேள்வி.. ஆதாரத்துடன் விளக்கிய TN Fact Check !