Tamilnadu
கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : இரவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அக். 6 அன்று இரவு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வி.பி.ராமன் சாலையில், வருகின்ற பருவமழை காலங்களில் மழைநீர் தேங்காத வகையில், எளிதாக பக்கிங்காம் கால்வாய்க்கு செல்லும் வகையில் மழைநீர் வடிகால் கால்வாயில் தூர்வாரப்பட்டு உள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து வி.பி.ராமன் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் மாசிலாமணி சாலைகள் சந்திப்பு பகுதியில், ராயப்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் மாசிலாமணி சாலைகளில் புதிதாக கட்டப்பட்டு உள்ள மழைநீர் கால்வாய்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் இணைப்பு கால்வாய் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மழைநீர் வடிகால் இணைப்பு கால்வாய் பணிகளை விரைந்து முடிக்குமாறு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அலுவலர்களுக்கு அறிவுருத்தினார்.
புதிதாக கட்டப்பட்டு வரும் மழைநீர் கால்வாய்கள் மூலமாக வி.பி.ராமன் சாலை பகுதியில் மழைநீர் எளிதாக பக்கிங்காம் கால்வாய்க்கு சென்று அங்கிருந்து கடலுக்கு சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Also Read
-
திருவள்ளுவர் விருது முதல் இலக்கிய மாமணி விருது வரை!: 13 விருதாளர்களை சிறப்பித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் சிலையுடன் கூடிய அரங்கம் நாளை (ஜன.17) திறப்பு!: முழு விவரம் உள்ளே!
-
அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அளிக்கப்பட்ட நோபல் பரிசு... அதிர்ச்சியில் நோபல் கமிட்டி!
-
“இதில் எனக்கு கூடுதல் பெருமை!” : சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைத்து துணை முதலமைச்சர் உரை!
-
“வாடிவாசலில் சீறி வரும் காளைகள்; வீரத்தை வெளிப்படுத்தும் மாடுபிடி வீரர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி!