Tamilnadu
சென்னையில் ரூ.41.83 கோடி செலவில் 7 முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் : அந்த 7 பணிகள் என்ன?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செப்.27 அன்று சென்னை, செனாய் நகர் ‘பாவேந்தர் பாரதிதாசன் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 41.83 கோடி ரூபாய் செலவில் செனாய் நகரில் பாவேந்தர் பாரதிதாசன் விளையாட்டுத் திடல், கோயம்பேடு சந்திப்பில் பசுமை பூங்கா, ராமாபுரத்தில் திறந்தவெளி பூங்கா, பம்மல், ஈஸ்வரி நகரில் விளையாட்டுத் திடல், வேளச்சேரி மேம்பாலத்தின்கீழ் அழகுபடுத்துதல் பணி, விஜயநகர் பேருந்து நிறுத்தம், முடிச்சூர், இரங்கா நகரில் மேம்படுத்தப்பட்ட குளம், தங்கசாலையில் ‘முதல்வர் படைப்பகம்’ ஆகிய 7 முடிவுற்ற திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம்
சென்னைப் பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்கால தேவைகளைக் கருதி பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், அரசின் நகர்ப்புற மேம்பாடு மற்றும் பெருநகரத் திட்டமிடல் தொடர்பான கொள்கை முடிவுகளை செயல்படுத்துதல், முழுமைத் திட்டம் மற்றும் விரிவான வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் செயல்படுத்தி வருகிறது.
திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப் பணிகளின் விவரங்கள்
சென்னை, செனாய் நகரில் 10.56 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பாவேந்தர் பாரதிதாசன் விளையாட்டுத் திடலில், பார்வையாளர்கள் மாடத்துடன் கூடிய கால்பந்து மைதானம், இரண்டு கால்பந்து பயிற்சி மைதானம், கூடைப்பந்து மைதானம், கைப்பந்து ஆடுகளம், நடைபாதை, இருக்கை வசதிகள், உடற்பயிற்சிக் கூடம், நிர்வாக அலுவலகம், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை, கோயம்பேடு சந்திப்பில் 10.27 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பூங்காவில், திறந்தவெளி அரங்கம், நிழற்கூடங்கள், எட்டு வடிவ நடைபாதை, சிறார் விளையாட்டுப் பகுதி, உடற்பயிற்சி பகுதி, யோகா தளம், சறுக்கு வளையம், நீரூற்று, நடைபாதை, இருக்கை வசதிகள், பசுமை புல்வெளிகளுடன் கூடிய அழகிய பூங்கா போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை, ராமாபுரத்தில் 7.32 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி பூங்காவில், பசுமை நிறைந்த புல்வெளிப் பகுதிகள், சறுக்கு வளையம், திறந்தவெளி அரங்கம், யோகா தளம், தியானப் பகுதி, சிறார் விளையாட்டு பகுதி, எட்டு வடிவ நடைபாதை, நிழற்கூடங்கள், பசுமை நிறைந்த புல்வெளி போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம், பம்மல், ஈஸ்வரி நகரில் 4.91 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டுத் திடலில், பார்வையாளர்கள் மாடத்துடன் கூடிய கால்பந்து மைதானம், உட்புற விளையாட்டு அரங்கம், பூப்பந்து மைதானம், யோகா தளம், சிறார் விளையாட்டு பகுதி, உடற்பயிற்சி கூடம், நடைபாதை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை, வேளச்சேரியில் 4.45 கோடி ரூபாய் செலவில் மேம்பாலத்தின்கீழ் அழகுபடுத்துதல் பணிகளும், விஜயநகர் பேருந்து நிறுத்தமும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் நீருற்று, இறகுபந்து மைதானம், கண்கவர் சிலைகள், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், நடைபாதை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம், முடிச்சூர், இரங்கா நகர் குளம் 3.85 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு, அக்குளக்கரையில் காற்றாடி நீருற்று, நீண்ட நடைபாதை, சிறார் விளையாட்டு பகுதி, பொதுமக்கள் கண்டுகளிக்க பார்வையாளர்கள் தளம், இயற்கை வனப்புடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளன.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சி.எம்.டி.ஏ சார்பில் முதன்முதலில் கொளத்தூரில் தொடங்கப்பட்ட ‘முதல்வர் படைப்பகம்’ போட்டி தேர்வு மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று, சிறப்புடன் இயங்கி வருகின்றது. சி.எம்.டி.ஏ சார்பில் 30 ‘முதல்வர் படைப்பகங்கள்‘ அறிவிக்கப்பட்டு, 28 ‘முதல்வர் படைப்பகங்கள்‘ அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, சென்னை, தங்கசாலையில் 47 இலட்சம் ரூபாய் செலவில் மாணவர்களுக்கு தேவையான வசதிகளுடன் புதுப்பித்து அமைக்கப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம்
என மொத்தம் 41.83 கோடி ரூபாய் செலவில் 7 முடிவுற்ற திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
Also Read
-
நடிகர் விஜயின் பிரச்சாரத்தில் நெரிசல்... 31 பேர் பலியானதால் அதிர்ச்சி- ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதி!
-
புதுச்சேரி... தொகுதிக்கு 30% வாக்காளர்களை கழகத்தில் இணைக்கவேண்டும் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் !
-
மீண்டும் மீண்டுமா... நாமக்கல்லிலும் தவறான தகவலை சொல்லி வசமாக சிக்கிய நடிகர் விஜய்... அது என்ன ?
-
அறுசுவை உணவுகள்.. புதுமையான அரங்குகள்... சென்னையில் தொடங்கியது வேளாண் வணிகத் திருவிழா!
-
“கல்வியில் மட்டுமல்ல வேளாண்மையிலும் சிறந்த தமிழ்நாடு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!