Tamilnadu

”விஜய் பின்னால் இருப்பவர்கள் இவர்கள்தான்” : சபாநாயகர் அப்பாவு பேட்டி!

ஒன்றிய அரசே சிலரை கட்சி தொடங்க வைத்து ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க பார்க்கிறார்கள். பின்புலத்தில் மோடி, அமித்ஷா இருக்கும் தைரியத்தில் அரசியல் அடிச்சுவடே தெரியாமல் அகந்தையோடு விஜய் பேசுகிறார் என சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு," ஒன்றிய அரசு கொடுக்கும் நிதியை பாரபட்சமின்றி கொடுக்க வேண்டும். மாற்றான் தாய் மனபான்மையோடு தமிழ்நாட்டை அணுகக்கூடாது.

ஆளுநர் எதையும் தெரிந்து கொள்ளாமல், அவருக்கு எழுதி கொடுப்பதை அப்படியே பேசுகிறார், அய்யோ பாவம் அவர். ஒன்றிய அரசே சிலரை கட்சி தொடங்க வைத்து ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.

விஜய் சினிமாவில் வேசுவதை போல் அகந்தையோடு பேசுகிறார். பின்புலத்தில் மோடி, அமித்ஷா பாஜக இருக்கும் தைரியத்தில், அரசியல் அடிச்சுவடு தெரியாமல் விஜய் அகந்தையோடு பேசுகிறார். பாஜக தான் விஜயை இயக்குகிறது என்று, இவரது பேச்சில் இருந்தே தெரிகிறது” என தெரிவித்துள்ளார்.

Also Read: அவதூறு வழக்கு : சீமானுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு - உயர்நீதிமன்றம் உத்தரவு!