Tamilnadu

ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !

அனைவருக்கும் சமமான கல்வி  கிடைக்க வேண்டும் அதற்கு உடல் குறை தடை இருக்கக்கூடாது என  முத்தமிழறிஞர் கலைஞர் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களும் சலுகைகளும் செய்துள்ளார் அதன் ஒரு பகுதியாக கடந்த 2007ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருத்த போது செவிதிறன் குறைபாடு உள்ளவர்களுக்கு ஆசியவிலேயே முதன்முறையாக சென்னை மாநில கல்லூரியில் பி. காம் மற்றும் பி. சி. ஏ பாடப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

தற்போது 300க்கு மேற்பட்ட மாற்றுதிறனாளி மாணவர்கள் இப்பாடப்பிரிவை எடுத்து படித்து வருகின்றனர். கடந்த 18 வருடங்களாக இந்த இரண்டு பாடபிரிவிலும் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று ஏராளமானோர் அரசு பணிகளில் பணியாற்றி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கென்றே இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை மாநில கல்லூரியில் 21 கோடி ரூபாய் செலவில் பிரத்யேக விடுதியை கடந்த ஆண்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இப்படி தொடர்ச்சியாக அரசு கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்காக குறிப்பாக செவித்திறன் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு பாடப்பிரிவு மற்றும் தனி விடுதி என திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ச்சியாக திட்டங்கள் வகுத்து வரும் நிலையில் புதிய வரலாற்று சாதனையாக செயற்கை நுண்ணறிவு சர்வதேச பாட பிரிவும் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆசியாவிலேயே முதன் முறையாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சென்னை மாநில கல்லூரியில் சர்வதேச செயற்கை நுண்ணறிவு கூட்டமைப்பு இணைந்து லிப் ரீடிங் மற்றும் சைன் லாங்குவேஜ் மூலம் ஏ.ஐ டூல்ஸ் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

Also Read: ஒரே மாதத்தில் 46,122 தெருநாய்களுக்கு தடுப்பூசி.. சென்னை மாநகராட்சி தகவல்! - முழு விவரம் உள்ளே!