Tamilnadu
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (12.9.2025) சென்னை பெரம்பூர் மூர்த்திங்கர் பகுதியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 295.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2,480 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை நேரடியாகவும், காணொலிக் காட்சி வாயிலாகவும் திறந்து வைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்பிற்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சென்னையில், மீனாம்பாள் சிவராஜ் நகர் திட்டப்பகுதியில் 46.72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 308 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், பழைய வியாசர்பாடி திட்டப்பகுதியில் 34.61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 192 அடுக்குமாடி குடியிருப்புகளை துணை முதலமைச்சர் நேரில் சென்று திறந்து வைத்து, தலா ஒரு பயனாளிக்கு குடியிருப்பிற்கான ஆணைகளை வழங்கி வீடுகளில் உள்ள வசதிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து சென்னை பெரம்பூர் மூர்த்திங்கர் பகுதியில் நடைபெற்ற விழாவில் மூர்த்திங்கர் தெரு பகுதி - 2 திட்டப்பகுதியில் 88.02 கோடிரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 648 அடுக்குமாடி குடியிருப்புகளையும், காணொலி காட்சி வாயிலாக கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி MGR நகர் திட்டப்பகுதியில் 45.98 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 512 அடுக்குமாடி குடியிருப்புகள்;
சித்தாபுதூர் பகுதி – 2 திட்டப்பகுதியில் 14.72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 112 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், திருப்பூர் மாவட்டம், பாரதி நகர் பகுதி – 2 திட்டப்பகுதியில் 32.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 384 அடுக்குமாடி குடியிருப்புகள், செட்டிப்பாளையம் திட்டப்பகுதியில் 23.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 240 அடுக்குமாடி குடியிருப்புகள், புதுக்கோட்டை மாவட்டம்;
அரிமளம் (திருமயம்) திட்டப்பகுதியில் 9.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 84 அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் 8 திட்டப்பகுதிகளில் 295.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2,480 குடியிருப்புகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்பிற்கான ஆணைகளை வழங்கினார்.
இப்புதிய குடியிருப்புகள், ஒவ்வொன்றும் தலா 400 சதுர அடி பரப்பளவுடன், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், அனைத்து
குடியிருப்பு வளாகங்களும், தார் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீரேற்று வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.
மேலும் பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் மூர்த்திங்கர் தெரு பகுதி – 2 திட்டப்பகுதியில் 22.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட சிறு விளையாட்டு அரங்கத்தினை துணை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நான்கு ஆண்டு சாதனைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
Also Read
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
’உங்களுடன் ஸ்டாலின்’ - மக்களுக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சென்னையில் இன்று மழை பெய்யுமா? : வானிலை நிலவரம் என்ன?
-
“வட சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க குடிசைகள் இருக்கக் கூடாது!” : துணை முதலமைச்சர் சூளுரை!
-
“வெற்றி வாகை சூடுவதற்கான முன்னோட்ட அணிவகுப்புதான் முப்பெரும் விழா!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!