Tamilnadu

ரூ.24,307 கோடி முதலீடு - 49,353 நபர்களுக்கு வேலைவாய்ப்பு : 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இன்று (11.9.2025) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ஓசூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், 23,303.15 கோடி ரூபாய் முதலீட்டில், 44,870 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 53 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் 1003.85 கோடி ரூபாய் முதலீட்டில் 4,483 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில், 39 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆக மொத்தம், ரூ. 24,307 கோடி முதலீட்டில் 49,353 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 250 கோடி ரூபாய் முதலீட்டில் 1,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 3 முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்து, 1210 கோடி ரூபாய் முதலீட்டில் 7900 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 4 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அத்துடன், நான்கு நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

ஓசூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய திட்டங்கள் பற்றிய குறிப்பு

Aspire Footwear Private Limited - அரவிந்த் குழுமத்தின் துணை நிறுவனமான Aspire Footwear Private Limited, வேலூர் மாவட்டம், சிப்காட் காட்பாடி தொழில் பூங்காவில், 350 கோடி ரூபாய் முதலீட்டில் 6000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில், தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டினார்.

Zetwork நிறுவனம் - Zetwork நிறுவனம், 5000 கோடி ரூபாய் முதலீட்டில் 3000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில், சோலார் செல்கள் உற்பத்தி திட்டத்தை தொடங்க முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், சூரிய எரிசக்தி துறையில், துணை நிறுவனங்களை ஊக்குவித்து, அதன் மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்துவதோடு, பசுமை ஆற்றல் ஏற்றுமதியை நன்கு அதிகரித்திடும்.

DCX Systems Limited, IAI-ELTA Systems உடன் இணைந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய உற்பத்தி திட்டம் அமைக்க உள்ளது. இத்திட்டத்தில், 850 கோடி ரூபாய் முதலீட்டில் 165 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில், வான்படை, கடற்படை மற்றும் தரைப்படை பயன்பாட்டிற்கான மேம்படுத்தப்பட்ட ரேடார் மற்றும் மின்னணு போர் அமைப்புகளை வடிவமைத்து உற்பத்தி மேற்கொள்ளப்படும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டது.

International Aerospace Manufacturing Pvt Ltd. (IAMPL) நிறுவனம், ஓசூர் எல்காட் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இயங்கிவரும் தனது வான்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்தி நிலையத்தை விரிவாக்கம் செய்ய உள்ளது. 200 கோடி ரூபாய் முதலீட்டில் 69 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிடும் வகையில், துல்லிய உபகரணங்கள் உற்பத்தித் திட்டத்தை விரிவாக்கம் செய்திட உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டது.

சிப்காட் வருங்கால நகர்திறன் பூங்கா -

சிப்காட் நிறுவனம், 210 கோடி ரூபாய் மதிப்பில், 300 ஏக்கர் பரப்பளவில் ஒரு வருங்கால நகர்திறன் பூங்காவை அமைத்துள்ளது. இந்த நகர்திறன் பூங்காவில் இதுவரை 22 நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 2728 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 6682 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்க உள்ளது. இந்த வருங்கால நகர்திறன் பூங்கா மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டது.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 23,303.15 கோடி ரூபாய் முதலீட்டில், 44,870 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 53 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சார்பில் 1003.85 கோடி ரூபாய் முதலீட்டில் 4,483 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிடும் வகையில், 39 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டங்களின் விவரங்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் 250 கோடி ரூபாய் முதலீட்டில் 1,100 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிடும் வகையில் 3 திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

அதன் விவரங்கள்:

அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களின் விவரங்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்றைய தினம் 1,210 கோடி ரூபாய் முதலீட்டில் 7,900 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிடும் வகையில் 4 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அதன் விவரங்கள்:

பணி நியமன ஆணைகள் வழங்குதல்

TEPL, Kaynes, Mando மற்றும் First Steps Babywear ஆகிய நான்கு தொழில் நிறுவனங்களின் பல்வேறு பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு இன்னோவேஷன் பிளாட்ஃபார்ம் – அறிமுகம் (Tamil Nadu Innovation Platform – Launch)

வழிகாட்டி நிறுவனம் மற்றும் YNOS வென்ச்சர் இன்ஜின் இணைந்து தமிழ்நாடு இன்னோவேஷன் பிளாட்ஃபார்ம் ஒன்றை தொடங்கியுள்ளது, இது மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக உள்ள புத்தொழில் நிறுவனங்கள், இன்குபேட்டர்கள், மற்றும் முதலீட்டாளர்கள் குறித்த தரவுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாகும். இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிமுகப்படுத்தினார்.

Also Read: “எஃகு போன்ற உறுதியுடன் என் இலக்குகளில் வெற்றி பெறுவேன்!” : ஓசூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!