Tamilnadu

சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : எந்தெந்த இடங்கள்... விவரம் உள்ளே !

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (11.09.2025) 12 வார்டுகளில் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் தங்களின் குறைகளை அங்குள்ள அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் :

1) திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்-1), வார்டு-4ல் ராமநாதபுரம் முதல் தெரு நடுநிலைப்பள்ளி எதிரில் உள்ள சமுதாயக் கூடம்,

2) மணலி மண்டலம் (மண்டலம்-21, வார்டு 16ல் ஆண்டார்குப்பம் பள்ளி மைதானம்,

3) தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்-4). வார்டு 35ல் கொடுங்கையூர், எம்.ஆர்.நகரில் உள்ள முத்துகுமாரசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

4) இராயபுரம் மண்டலம் (மண்டலம் 51 வார்டு 54ல் வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஜே.கே.கன்வென்ஷன் ஹால்,

5) திரு.வி.க.நகர் மண்டலம் (மண்டலம் 51. வார்டு 69ல் அகரம் பார்த்தசாரதி தெருவில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானம்,

6) அம்பத்தூர் மண்டலம் (மண்டலம்-7). வார்டு-93ல் முகப்பேர். நந்தினி லட்சுமணன் தெருவில் உள்ள ஏ.எஸ்.என். மஹால்,

7) அண்ணாநகர் மண்டலம் மண்டலம் 81 வார்டு 94ல் வில்லிவாக்கம் எம்.டி.எச். சாலையில் உள்ள டிகோ திருமண மண்டபம்.

8) தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9) வார்டு-111ல் ஆயிரம் விளக்கு, மாதிரி பள்ளிச் சாலையில் உள்ள சமுதாயக் கூடம்.

9) கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம் -10) வார்டு-127ல் கோயம்பேடு, காளியம்மாள் கோயில் தெரு. சென்னை குடிநீர் வாரிய வளாகத்தில் உள்ள பேட்டரி மூன்று சக்கர வாகன நிறுத்துமிடம்,

10) அடையாறு மண்டலம் (மண்டலம் 13) வார்டு-170ல் கோட்டூர் இரயில் நிலையம் அருகிலுள்ள ஹாக்கி விளையாட்டு மைதானம்,

11) பெருங்குடி மண்டலம் (மண்டலம் 14) -1896 பள்ளிக்கரணை, ஐஐடி காலனி 3வது பிரதான சாலையில் உள்ள ஐஐடி சமுதாயக் கூடம்.

12) சோழிங்கநல்லூர் மண்டலம் (மண்டலம் 15) வார்டு. 199ல் பழைய மகாபலிபுரம் சாலையில் ள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 12 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

இந்த முகாம்கள் காலை மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Also Read: காவலர் நாள் விழா : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்ற காவலர்கள்!