Tamilnadu

தமிழ்நாட்டில் தி.மு.க.தான் வலுவான கட்சி : பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு இந்தியாவிற்கே வழிகாட்டும் அரசாக செயல்பட்டு வருகிறது.

மகளிர் விடியல் பயணத்திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண், தமிழ்புதல்வன், முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வர், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், கலைஞர் கனவு இல்லம், மக்களைத் தேடி மருத்துவம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம் என மக்களுக்கான திட்டங்களை வகுத்து சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறது.

இந்த திட்டங்களால் பயன் அடைந்த மக்கள், திமுக அரசை பாராட்டுவது மட்டுமல்ல, ஒன்றிய பா.ஜ.க அரசே திராவிட மாடல் அரசின் திட்டங்களை பாராட்டியுள்ளது.

மக்களுக்கான திட்டங்கள் மட்டுமல்ல, மாநில உரிமைக்காகவும் முதல் குரல் எழுப்பும் மாநிலமாக தமிழ்நாடுதான் இருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குரல்தான் இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது.

இப்படி உண்மைகள் இருக்க எப்பாடி பழனிசாமி மற்றும் பா.ஜ.கவினர் திமுக அரசு மீது பொய்களையும், தவறான தகவல்களையும் பரப்பி வருகிறார்கள்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் தி.மு.க.தான் வலுவான கட்சி என பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் INDIA TODAY நடத்தும் கருத்தரங்கில் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் தி.மு.க மிகவும் வலிமையாக உள்ளதாகவும், 47 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளை தக்க வைத்துள்ளது. திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் இல்லை என்றும் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Also Read: ”அனைத்து திட்டங்களையும் உடனே நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!