Tamilnadu

இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !

பொதுமக்களின் பாதுகாப்புக்காக அனைத்து பொது பயன்பாட்டு வாகனங்களிலும் வாகன இருப்பிட கண்காணிப்பு அமைப்பு (Vehicle Location Tracking Systems) கட்டாயம் பொருத்த வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து அனைத்து பொது பயன்பாட்டு வாகனங்களிலும் வாகன இருப்பிட கண்காணிப்பு அமைப்பை (Vehicle Location Tracking Systems) பொருத்தும் வகையில் கருவிகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது.

வாகனங்களில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் அடிப்படையிலான கண்காணிப்பு சாதனங்களின் உதவியுடன் பொது வாகனங்களைக் கண்காணிக்க வாகன இருப்பிட கண்காணிப்பு அமைப்பு (Vehicle Location Tracking Systems) உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணையை தொடர்ந்து வாகன இருப்பிட கண்காணிப்பு அமைப்பை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை டெண்டர் கோரி உள்ளது.தமிழகத்தில் அனைத்து வகையான பேருந்துகள், அனைத்து வகையான டாக்ஸிகள், மேக்சி கேப், அனைத்து வகையான சரக்கு வாகனங்கள் என்று அனைத்து பொது பயன்பாட்டு வாகனங்களிலும் இது பொருத்தப்பட உள்ளது. இந்த அமைப்பை அனைத்து பொது பயன்பாட்டு வாகனங்களில் பொருத்த வேண்டுமென்று ஒன்றிய அரசின் சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ,

Also Read: திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!