Tamilnadu
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் இடையே மெட்ரோ ரயில் திட்ட நீட்டிப்புக்கு ஆயிரத்து 964 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையின் மெட்ரோ வழித்தடம் கூடுதலாக, விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் இடையே மெட்ரோ ரயில் திட்ட நீட்டிப்புக்கு 1,964 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
15.46 கிலோ மீட்டர் தூர மெட்ரோ ரயில் வழித்தட பணிகளின் முதற்கட்டமாக நிலம் கையகப்படுத்தல் பணிகளுக்கும் மற்றும் பிற பணிகளுக்கும் 1,964 கோடி ரூபாய் ஒதுக்கி நிர்வாக ரீதியாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!
-
தமிழ்நாடு திறன் பதிவேடு (AI Powered TNSKILL Registry) ! : துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!