Tamilnadu
தமிழ்நாட்டில் 1 லட்சம் பேருக்கு 194 டாக்டர்கள் : இந்திய சராசரியை விட இரு மடங்கு அதிகம் பெற்று சாதனை!
இந்தியாவில் சராசரியாக ஒரு லட்சம் மக்களுக்கு 99 டாக்டர்களும், தமிழ்நாட்டில் 194 டாக்டர்களும் இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரங்கள் கிடைத்திருக்கின்றன. நாட்டின் சுகாதார கட்டமைப்பில் டாக்டர்களின் பங்கு மிகமுக்கியமானது.
அவர்கள் மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கும், பெருகி வரும் நோய்களைத் தடுப்பதற்கும், அதற்கான சிகிச்சை களை மேற்கொள்வதற்கும் மற்றும் சமூகத்தின் ஒட்டுமொத்த நலவாழ்வை மேம்படுத்துவதற்கும் முதுகெலும்பாக இருக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக தொற்று நோய்களை கட்டுப்படுத்துதல், தொற்று கண்காணிப்பு மற்றும் அதற்கான சுகாதார கொள்கைகளை வகுப்பதில் டாக்டர்கள் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
அந்தவகையில் கடந்த 2020-ம் ஆண்டு ஒட்டுமொத்த உலகத்தையும் உலுக்கி எடுத்த கொரோனா தொற்று காலத்தில் டாக்டர்கள் உள்ளிட்ட சுகாதார கட்டமைப்பில் அங்கம் வகித்தவர்கள் பலரையும் அனைத்து மக்களும் கடவுளாகவே பார்த்தனர்.
சுகாதார கட்டமைப்பின் மையப் புள்ளி!
சுகாதார கட்டமைப்பின் மையப்புள்ளியாக பார்க்கப்படும் டாக்டர்கள், இந்தியாவில் அரசு மற்றும் தனியார்துறைகளில் தங்கள் பங்களிப்பு மூலம் மக்களுக்கு தரமான மருத்துவ தேவையை உறுதி செய்து வருகிறார்கள். இருந்தபோதிலும், அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணத்தினால், போதிய டாக்டர்கள் எண்ணிக்கை இல்லாதது ஒரு கவலையளிக்கும் செய்தியாகவே உள்ளது.
மாநிலங்களில் டாக்டர்களின் எண்ணிக்கை!
அதன்படி, கடந்த ஆண்டு (2024) அக்டோபர் மாதம் வரையிலான ஆதார் அடிப்படையிலான மக்கள் தொகை புள்ளி விவரங்களின் அடிப்படையில், இந்தியாவில் சராசரியாக ஒரு லட்சம் மக்களுக்கு பதிவு செய்யப்பட்ட 99 டாக்டர்கள் இருப்பதாக தெரியவந்துள்ளன. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் இருக்கும் மக்கள் தொகை அடிப்படையில், ஒரு லட்சம் மக்களுக்கு எவ்வளவு டாக்டர்கள் இருக்கிறார்கள் என்ற விவரங்களும் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் ஒருலட்சம் மக்களுக்கு 194 டாக்டர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களின் பட்டியலில் ஒரு லட்சம் மக்களுக்கு கோவாவில் 298 டாக்டர்களும், கர்நாடகாவில் 207 டாக்டர்களும், கேரளாவில் 203 டாக்டர்களும், ஆந்திராவில் 198 டாக்டர்களும், பஞ்சாப்பில் 173 டாக்டர்களும், மராட்டியத்தில் 164 டாக்டர்களும், டெல்லியில் 148 டாக்டர்களும், ஜம்மு காஷ்மீரில் 137 டாக்டர்களும், குஜராத்தில் 109 டாக்டர்களும், அருணாசல பிரதேசத்தில் 105 டாக்டர்களும் இருக்கின்றனர். மற்ற மாநிலங்களில் ஒரு லட்சம் மக்களுக்கு இரட்டை இலக்கத்தில் டாக்டர்களின் எண்ணிக்கை இருக்கிறது.
Also Read
-
அமெரிக்காவின் சூழ்ச்சிக்கு துணைபோகும் ஒன்றிய பாஜக அரசு... திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் !
-
விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலம்... சென்னையில் எந்தெந்த இடங்கள் வழியாக கொண்டுசெல்லலாம்... விவரம் உள்ளே !
-
அமெரிக்காவின் வரி உயர்வால் பாதிக்கப்படும் தமிழ்நாடு... ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க கி.வீரமணி கோரிக்கை !
-
டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு புதிய பொறுப்பு... தமிழ்நாடு அரசு அறிவித்த புதிய ஆணையத் தலைவராக நியமனம் !
-
பீகாரில் கூடுதலாக 3 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ்! : சிறப்பு வாக்காளர் திருத்தம் மூலம் ECI அட்டூழியம்!