Tamilnadu
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நகரப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கும் வகையில், இன்று சென்னை, மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் மாணவர்களுடன் உணவு அருந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதேபோல் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் சேர்ந்து மாணவர்களுக்கு உணவுகளை பரிமாறி அவர்களுடன் காலை உணவு உட்கொண்டார்.
இந்த விழாவிற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்தார். நகரப்புறங்களில் உள்ள 2 ஆயிரத்து 429 பள்ளிகளில் இன்று முதல் முதலமைச்சரின் காலை உணவு வழங்கப்படுகிறது. இதனால் 3 இலட்சத்து 5 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற உள்ளார்கள்.
மேலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 5 ஆம் கட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. ஏன் வெளிநாடுகளிலும் இந்த திட்டத்தை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது.
Also Read
-
“தமிழ்நாட்டில் என்னவானாலும் ‘விஜய்’ விளக்கமளிக்கப் போவதில்லை!” : கனிமொழி எம்.பி கண்டனம்!
-
டெல்லியில் நடைபெறும் ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் தி.மு.க பங்கேற்காது! : தலைமைக் கழகம் அறிவிப்பு!
-
தமிழ்நாட்டிற்கான 152 மருத்துவ இடங்களை கைவிட்டுவிடக்கூடாது! : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வலியுறுத்தல்!
-
“திருச்சியில் கொடூரம்.. மது கொடுத்து சிறுமிக்கு கூட்டு பா*யல் வன்கொடுமை.. சாலையில் வீசிச் சென்ற அவலம்”
-
“ஒவ்வொரு வீட்டிலும் கலைஞரின் திட்டங்கள்.. மக்களுக்கான தலைவர்.. இதுதான் கலைஞர்” : கனிமொழி எம்.பி புகழாரம்!