Tamilnadu
மின்கழிவுகள் மூலம் ஈட்டிய GST தொகை எவ்வளவு? : நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா MP கேள்வி!
மின்சாரம் மற்றும் மின்னணுக் கழிவுகள், பேட்டரி கழிவுகள் துறைகளில் பிரித்தெடுத்தல், மறுசுழற்சி செய்தல், துண்டாக்குதல் அல்லது புதுப்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஜிஎஸ்டியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் குறித்து திமுக மாநிலங்கலவை உறுப்பினர் திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் முறையான மறுசுழற்சி முறையில் ஈட்டிய ஜிஎஸ்டி வரித் தொகை எவ்வளவு? மறுசுழற்சித் துறையில் முறைசாரா அல்லது பதிவு செய்யப்படாத ஆபரேட்டர்களால் ஏற்படும் வருவாய் இழப்பு எவ்வளவு? மின்-கழிவு மற்றும் பேட்டரி கழிவு மறுசுழற்சிக்கான முறைப்படுத்துதலை ஊக்குவிப்பதற்கும் வரி தவிர்ப்பைக் குறைப்பதற்கும் அரசிடம் உள்ள திட்டங்கள் என்ன? அதன்மூலம் எதிர்பார்க்கப்படும் வருவாய் எவ்வளவு எனவும் அவர் கேட்டுள்ளார்.
தோல்வியில் முடிந்ததா மேக் இன் இந்தியா திட்டம்?
தமிழ்நாட்டில் மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் துறை வாரியாக தொடங்கப்பட்ட மொத்த திட்டங்களின் எண்ணிக்கை குறித்து திமுக மக்களவை உறுப்பினர்கள் செல்வம் மற்றும் சி. என். அண்ணாதுரை கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் இந்தத் திட்டங்களின் செயல்பாடு குறித்து அரசு நடத்தியுள்ள ஆய்வுகள் என்ன? அதேபோல் மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் ஏற்பட்ட தாமதங்கள் அல்லது ரத்து செய்யப்பட்ட திட்டங்கள் எவை? தமிழ்நாட்டில் இந்த முயற்சியின் கீழ் ஒதுக்கப்பட்ட ஆனால் பயன்படுத்தப்படாமல் உள்ள தொழில்துறை வளாகங்கள் அல்லது சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SEZ) யாவை? மேலும் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அரசிடம் உள்ள செயல்திட்டங்கள் என்ன என்றும் அவர்கள் கேட்டுள்ளனர்.
Also Read
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
மூளையை தின்னும் அமீபா வைரஸ் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!