Tamilnadu
செமி கண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிக்க 5 ஆண்டு திட்டம்! : முழு முனைப்பில் தமிழ்நாடு அரசு!
செமி கண்டக்டர் உற்பத்தித்துறையில் முக்கிய இடத்தை பெறுவதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளை தமிழ்நாடு அரசு உருவாக்கி வருகிறது.
செமி கண்டக்டர் உற்பத்தி மற்றும் வடிவமைப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம் - 2030 எனும் 5 ஆண்டு திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், இத்திட்டத்திற்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
செயல்திறன் அடிப்படையில் மானியங்களை வழங்குவதன் மூலம், தமிழ்நாட்டின் தொழில்நுட்ப வடிவமைப்பு திறனை மேம்படுத்துவதையும், சிப் கண்டுபிடிப்புகளின் எதிர்கால மையமாக மாநிலத்தை நிலைநிறுத்துவதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
IC-கள், சிப்செட்கள், சிஸ்டம் ஆன் சிப்கள், ஆகியவற்றிற்கான செமிகண்டக்டர் வடிவமைப்பில் ஈடுபட்டுள்ள தமிழ்நாட்டை தளமாகக் கொண்ட நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகைகள் மற்றும் தேவையான ஆதரவு அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்ட சிப்-களை குறைந்த செலவில் தயாரிப்பதற்காக தேசிய மற்றும் சர்வதேச செமி கண்டக்டர் நிபுணர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
Also Read
-
முதுபெரும் எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் மறைவு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
பதைபதைக்க வைக்கும் வீடியோ.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. விஜய் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது பாய்ந்த வழக்கு!
-
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... Fastag இல்லையென்றால் இருமடங்கு கட்டணம்.. வருகிறது புதிய நடைமுறை!
-
”திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
”தேசத்தை காக்க தி.க, தி.மு.க தான் மருந்து” : சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாட்டில் ஆ.ராசா.எம்.பி பேச்சு!