Tamilnadu
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
05.07.2025 அன்று தினமலர் நாளிதழில், தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்களில் போதிய ஊழியர்கள் இல்லாததால் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயக்கம் எனவும், இந்த ஆண்டு மட்டும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன என வெளியிடப்பட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பான செய்தி என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் 54,483 குழந்தைகள் மையங்கள் தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மாநிலத்தின் அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட அங்கன்வாடி மையங்கள் எண்ணிக்கைக்குள், தேவையான இடத்திற்கு இடமாற்றம் செய்து கொள்ள ஒன்றிய அரசு 1.2.2014 தேதியிட்ட கடிதத்தில், மாநில அரசுக்கு அனுமதி அளித்துள்ளது.
அதிக நகரமயமாக்கல் காரணமாக இடம்பெயரும் மக்கள் தொகை (migration population), பயனாளிகளின் வருகை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, முதன்மை அங்கன்வாடி மையத்தினை குறு மையமாகவும். குறு மையத்தினை முதன்மை அங்கன்வாடி மையமாக மாற்றிடவும். திட்டம் சென்றடையாத புதியபகுதிகளில், புதிய மையங்களை துவக்கிடவும், குறைவான பயனாளிகள் கொண்டு அருகருகே உள்ள இரு மையங்களை இணைத்திடவும், தூரத்தில் செயல்படும் மையங்களை பயனாளிகளின் வசிப்பிடத்திற்கு அருகிலேயே புதிதாக ஆரம்பிக்கவும். மலைப்பகுதி மற்றும் யாரும் எளிதில் சென்றடைய முடியாத பகுதிகளை கண்டறிந்து புதிதாக குறு மையங்களை ஆரம்பித்திடவும். கடந்த ஆறு மாதங்களாக அங்கன்வாடி மையங்கள் மறு வரைப்படுத்தல் நடவடிக்கை (rationalisation exercise) மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக பயனாளிகள் (0-6 வயதுடைய குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்) குறைவாக உள்ள 343 குழந்தை மையங்கள் குறு மையங்களாகவும், அதிக பயனாளிகள் உள்ள 305 குறு மையங்கள் முதன்மை மையங்களாகவும் மாற்றப்படவுள்ளன. மக்கள் தொகை குறைவான இடங்களில் 232 முதன்மை மையங்கள் மற்றும் 258 குறு மையங்கள் அருகில் உள்ள மையங்களுடன் இணைத்தும், மக்கள் குடியிருப்பு அதிகமாக உள்ள இடத்தில் 228 முதன்மை மையங்களும் 111 குறு மையங்கள் இடம் மாற்றம் செய்யவும்.
இதுவரை குழந்தைகள் மையங்கள் அமைக்கப்படாத இடங்களை கண்டறிந்து 220 முதன்மை மையங்கள் மற்றும் 160 குறு மையங்கள் புதிதாக தொடங்கிடவும், மலைப்பகுதியில் உள்ள மக்களுக்கும் இத்திட்டம் சிறப்பாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் மலைப்பகுதிகளில் 78 புதிய குறுமையங்கள் தொடங்கிடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய யாவையும் தமிழ்நாடு அரசின் பரிசீலனையில் மட்டுமே உள்ளன. இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
நிலைமை இவ்வாறு இருக்க, தற்போதும் 54,483 குழந்தைகள் மையங்கள் செயல்பட்டு வருகின்ற தருணத்தில், புதிதாக 501 மையங்கள் மூடப்பட்டுள்ளன என்ற செய்தி உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.
மேலும், தற்போது 7,783 அங்கன்வாடி காலிப் பணி இடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகின்றது. விரைவில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற தகவலும் தெரிவிக்கப்படுகிறது.
Also Read
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!