Tamilnadu
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் 3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி வரும் 10.07.2025 முதல் 12.07.2025 (காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி) வரை நடைபெற உள்ளது.
3 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாம் சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள EDII-TN வளாகத்தில் நடைபெறவுள்ளது.
பயிற்சி முடிவில், நீங்கள் பின்வரும்வற்றை கற்றுக்கொள்வீர்கள்:
மின்சார வாகன (EV) தொழில்நுட்பத்தை தெளிவாக புரிந்துகொள்வீர்கள்
மோட்டார், பேட்டரி, கட்டுப்பாட்டி, சார்ஜிங் அமைப்புகள் இயக்கம்
பாதுகாப்பு நடவடிக்கைகள், சர்வீசிங் முறைகள் மற்றும் அடிப்படை
கோளாறுகளை கண்டறியும் திறன், EV டீலர்ஷிப், பழுது சரிசெய்தல்
நிலையங்கள் மற்றும் ஃபிராஞ்சைஸி தொழில் மாடல்களை செயல்படுத்தும் பயிற்சி பெறுவீர்கள்.
மின்சார வாகனத் துறையில் கிடைக்கும் அரசுத் திட்டங்கள் மற்றும் ஊக்கத தொகைகள் குறித்து வழிகாட்டல் பெறுவீர்கள்.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது: 9543773337 / 9360221280
Also Read
-
இந்தி திணிப்பு : “நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்...” - பட்டியலிட்டு முதலமைச்சர் கண்டனம்!
-
கர்தவ்ய த்வார்.. மீண்டும் மீண்டும் இந்தி.. எத்தனை முறை அடித்தாலும் திருந்தாத பாஜக - கொந்தளித்த தலைவர்கள்!
-
ஊடகங்களையும் விட்டுவைக்காத த.வெ.க... கண்டுகொள்ளாத விஜய்.. கொந்தளித்த பத்திரிகையார் அமைப்புகள்!
-
அனைவரையும் உள்ளடக்கியதே திராவிட எஞ்சின் ஆட்சி… ஒன்றுக்கும் உதவாததே பா.ஜ.க எஞ்சின் - முரசொலி தலையங்கம்!
-
மாநிலங்களவை தேர்தல் - தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க-விற்கு ஒரு MP சீட் ஒதுக்கீடு!