Tamilnadu
அதிநவீன மின்சார பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.. பேருந்தில் உள்ள வசதிகள் என்ன ?
பொது போக்குவரத்து சேவையில் மின்சார வாகனங்களை பயன்படுத்த அரசு முன்னெடுத்து உள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று சென்னை பெருநகரத்தின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத மின்சாரத்தால் இயங்கக்கூடிய 207.90 கோடி மதிப்பீட்டிலான 120 தாழ்தழ பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.
இந்தப் பேருந்துகள் திரு.வி. க.நகர், வள்ளலார் நகர், பெரம்பூர், கவியரசு கண்ணதாசன் நகர், கோயம்பேடு, பூந்தமல்லி, நெற்குன்றம், பெரியபாளையம், கிளாம்பாக்கம், கிண்டி என 11 வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளது. இந்த பேருந்து சேவையை தொடங்கி வைத்த பின், அதில் உள்ள சிறப்பு அம்சங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் கலந்துரையாடினார்.
இந்த பேருந்தில் இருக்கும் அதிநவீன வசதிகள் :
ஒவ்வொரு இருக்கைக்கும் சீட்டு பெல்ட்.
மின்சாரப் பேருந்து முழுவதும் 7 சி.சி.டி.வி கேமராக்கள்.
பேருந்தின் ஒவ்வொரு இருக்கைக்கு அடியில் மொபைல் சார்ஜ் செய்யும் வசதி.
தானியங்கி பேருந்து நிறுத்த அறிவிப்பு.
ஜி.பி.எஸ். வழியாகச் செயல்படும் சிக்னல் அமைப்பு.
பெரிய எல்.இ.டி திரைகள், தமிழ், ஆங்கிலத்தில் வழித்தட அறிவிப்பு.
மாற்றுத்திறனாளிகள் ஏறுவதற்கு வசதியாக தரை வரை கீழிறங்கும் வகையில் படிக்கட்டுகள்.
மழைக்காலத்தில் பேருந்துக்குள் தண்ணீர் செல்லாத வகையில் சிறப்பு வசதி.
Also Read
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
மூளையை தின்னும் அமீபா வைரஸ் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!