Tamilnadu
40 லட்சம் லிட்டர் நீரை சேமிக்கலாம்... மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகளை தொடங்கிய சென்னை மாநகராட்சி !
சென்னை பெருநகரில் பருவமழையின் போது ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில், கட்டடங்கள், பூங்காக்கள் உள்ளிட்டவற்றில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்க மாநகராட்சி முடிவு செய்து பணிகளை துவங்கி உள்ளது....
முதற்கட்டமாக கோடம்பாக்கம், அண்ணா நகர், தேனாம்பேட்டை மண்டலங்களில் உள்ள இந்திரா காலனி மைதானம், மாதிரி பள்ளி மைதானம், ஆர்.ஏ.புரம் செயின்ட் மேரிஸ் விளையாட்டு மைதானம், தி.நகர் ஸ்ரீ வெங்கட்நாராயணா மைதானம், டிரஸ்ட்புரம் மைதானம், கிரசண்ட் பள்ளி மைதானம், மேயர் ராமநாதன் சாலை ஆகிய ஏழு விளையாட்டு திடல்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நிதியுதவியின் கீழ், ஜெர்மன் தொழில்நுட்பத்தில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு விளையாட்டு திடல்களிலும் தலா, 1.6 கோடி ரூபாய் மதிப்பில், தலா 5 லட்சம் லிட்டர் மழைநீரை சேமிக்கும் வகையில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது ..ஒவ்வொரு கட்டமைப்பும், 25 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம் கொண்டதாக உள்ளது. விளையாட்டு மைதானத்தில் பெய்யும் மழைநீர், இக்கட்டமைப்பு பகுதியில் வந்து சேரும் வகையில், வடிவமைக்கப்படுகிறது.
அதைப்போல 15 மண்டலங்களில் உள்ள 770 பூங்காக்களில், 3,000 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில், நிலத்தடி மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டமைப்பு பணி நடந்து வருகிறது. இதில் 250 பூங்காக்களில் இப்பணிகள் முடிந்துள்ளது.பூங்கா, விளையாட்டு மைதானத்தில், பல இடங்களில் அமைக்கப்படும், 'கேட்ச் பிட்' எனும் மழைநீர் உள்வாங்கியில் வடியும் தண்ணீர், குழாய் வாயிலாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புக்கு எடுத்து செல்லப்படும்.
இதன் வாயிலாக, விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் தேங்குவது தடுக்கப்படும். மேலும், நீர்நிலைகளில் நீர் உள்வாங்காமல், மழைநீர் வடிகால்களில் கொள்ளளவை மீறி செல்லும்போது, இதுபோன்ற விளையாட்டு திடல்களில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புக்கு திருப்பி விடப்படும். இதன்மூலம் குடியிருப்புகளில் பகுதிகளில் ஏற்படும் வெள்ள பாதிப்பையும் தடுக்க முடியும். இந்த கட்டமைப்பு, 40 லட்சம் லிட்டர் கொள்ளளவு நீரை சேகரித்து வைக்கும். இவற்றால் நீலத்தடி நீர் உயர்வதுடன், அருகாமை குடியிருப்புகளில் கோடை காலங்களிலும் நிலத்தடி நீர் பஞ்சம் ஏற்படாமல் தடுக்க முடியும்.
Also Read
-
திராவிட மாடல் ஆட்சியில் 25 இலட்சம் பேருக்கு பட்டா! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்!
-
“ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறக்கூடாது என்பது கொடூரமான சர்வாதிகார மனோபாவம்!” : முரசொலி தலையங்கம்!
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!
-
வெளியானது ஐபிஎல் 2026 முதற்கட்ட அட்டவணை… El Clasico CSK vs MI போட்டிகள் இல்லையா? - முழு விவரம்!