Tamilnadu
உலக அரங்கில், தமிழ்நாடு விவசாயிகளின் விளைப்பொருட்களை சந்தைப்படுத்துதல் - அமெரிக்காவில் அமைச்சர் ஆலோசனை!
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள், 23.05.2025 அன்று விஸ்கான்சின் பல்கலைக்கழகச் செயலாளர் ரெண்டி ரொமன்ஸ்க்கி, ஷாலா வெர்னர், பயிர் பாதுகாப்பு மேலாளர், பயிர் பாதுகாப்பு பணியகம் (Bureau of Plant Industry), திருமதி.ஜுலி லாஷா, நிர்வாக இயக்குநர் விஸ்கான்சின் மாகாண வேளாண்மைத்துறை மற்றும் திருடிராய் ஸ்பிரேக்ஸ் இயக்குநர். உணவு பாதுகாப்பு துறை ஆகியோருடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வின் போது, திடீரென பரவும் பூச்சிகள் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். மேலும், முன்னறிவிப்பு செய்வது பற்றிய நவீன தொழில்நுட்பங்கள், பாதுகாப்பான பூச்சி மற்றும் நோய் தாக்குதல் மேலாண்மை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தால் அமைக்கப்பட்டுள்ள மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் உலக அரங்கில், தமிழக விவசாயிகளின் விளைப்பொருட்களை சந்தைப்படுத்துதல் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
23.06.2025 அன்று பிற்பகல் விஸ்கான்சின் மாகாணத்தில் அதிகளவில் உருளைக்கிழங்கு, மற்றும் வெங்காயம் உற்பத்தி செய்யும் மிகப்பெரிய வேளாண் பண்ணைக்கு சென்று, அங்கு விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கு, சிவப்பு உருளைக்கிழங்கு,, கேரட், புதினா ஆகிய பயிர்களின் சாகுபடி தொழில்நுட்ப முறைகள், நவீன இயந்திரங்களின் பயன்பாடு, செயற்கை நுண்ணறிவு மூலம் பயிர் பாதுகாப்பு மேற்கொள்ளுதல், நீர் மேலாண்மை மற்றும் மண்ணின் தரம் ஆகியவை பற்றி விரிவாக கேட்டறிந்தார்.
மேலும், விஸ்கான்சின் மாகாணத்தில் அதிக மகசூல் தரக்கூடிய கேரட் விதைகளை தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்து தமிழக விவசாயிகள் அதிக மகசூல் பெற்று அதன் மூலம் வருமானத்தை பெருக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ள விரிவாக விவாதித்தார்.
பின்னர், 24.06.2025 அன்று மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள கான்செஸ் மாநில வேளாண் பல்கலைக்கழகத்தில் கான்சாஸ் மாகாண வேளாண்துறை செயலாளர், மாகாணத்தின் ஏற்றுமதி இயக்குநர், பல்கலைக்கழகத்தின் வேளாண்துறை பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து பூச்சி நோய் தாக்குதல் மேலாண்மை, வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டுதல், செயற்கை நுண்ணறிவு மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் முறைகள், ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் இங்கு கடைபிடிக்கப்படும் சிறந்த நடைமுறைகள் குறித்து கலந்துரையாடினார்.
Also Read
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
மூளையை தின்னும் அமீபா வைரஸ் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!