Tamilnadu
”பாஜகவின் அப்பட்டமான சமஸ்கிருத மேலாதிக்க வெறி” : ஒன்றிய அரசு மீது சு.வெங்கடேசன் தாக்கு!
ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மேலும் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதேபோல் இந்தி தெரியாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தி மொழியில் அலுவலல் கடிதங்களை அனுப்பி தங்களின் இந்தி பாசத்தை வெளிப்படுத்தி வருகிறது ஒன்றிய அரசு.
இந்நிலையில், சமஸ்கிருதத்தை மேம்படுத்த, கடந்த 10 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 533 கோடி ரூபாயை ஒன்றிய பாஜக அரசு செலவு செய்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது. மேலும் அதே காலகட்டத்தில், பாரம்பரிய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகியவற்றுக்கு மொத்தமாக 147 கோடியே 56 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம், மாநிலத்தில், சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழிகள் ஊக்குவிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழை இந்திக்கு இணையான அதிகாரப்பூர்வ மொழியாக மாற்றி, சமஸ்கிருதம் போன்ற இறந்த மொழியை விட தமிழுக்கு அதிக நிதி ஒதுக்குங்கள் என வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், எந்த மாநிலத்திலும் அலுவல் மொழியாக இல்லாத சமஸ்கிருதத்திற்கு கடந்த 10 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 533 கோடி ரூபாயை ஒன்றிய பாஜக அரசு செலவு செய்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் இந்த ஓரவஞ்சனைக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்கள் பதிவு செய்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், "பாஜக அரசு சமஸ்கிருதத்துக்கு 2532.59 கோடியும் தமிழ் உள்ளிட்ட பிற ஐந்து செம்மொழிகளுக்கும் சேர்த்து 147.56 கோடியும் ஒதுக்கியுள்ளது.
தமிழ், தமிழ்நாட்டு மக்கள், தமிழ் கடவுள்கள் எல்லாம் பாஜக வுக்கு ஓட்டுக்கு மட்டும் தான். நோட்டுகள் எல்லாம் சமஸ்கிருதத்துக்கு தான். இது தான் பாஜகவின் இது தான் பாஜகவின் அப்பட்டமான சமஸ்கிருத மேலாதிக்க வெறி” என கடுமையாக கண்டித்துள்ளார்.
Also Read
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
மூளையை தின்னும் அமீபா வைரஸ் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!