Tamilnadu
”பா.ஜ.கவுக்கு கிடைத்த அருமையான அடிமை அ.தி.மு.க” : அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு!
திராவிடத்தை விமர்சித்து பா.ஜ.க நடத்திய முருகன் மாநாட்டில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்று, தாங்கள் சிறந்த அடிமைகள் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள் என அமைச்சர் ரகுபதி கண்டித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, "நாங்கள் ஆன்மீகத்திற்கு எதிரானவர்களாக இருந்து இருந்தால், இன்று இவர்களால் முருகன் மாநாட்டை நடத்தியே இவருக்க முடியாது. இங்கு ஆன்மீகம் தழைக்கிறது என்ற காரணத்தாலும், முருகனை தமிழக மக்கள் இதயத்தில் ஏந்தி இருக்கிறார்கள் என்பதனாலும் தான் இன்று முருகனை இவர்கள் கையில் எடுத்து இருக்கிறார்கள்.
கடவுகளை வைத்து யார் வேஷம் போடுகிறார்கள் என்பது இங்குள்ள தமிழர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். இந்த வேடதாரிகளை அவர்கள் நம்ப மாட்டார்கள். பவன் கல்யாண் தனது சித்து வேலைகளை தமிழ்நாட்டில் காண்பிக்க முடியாது. அதற்கு தகுந்த இடம் தமிழ்நாடு அல்ல. வெங்கடாஜலபதி, முருகன் என இரட்டை வேடம் போடுகிறார் பவன் கல்யாண். அவரைப்போல் இரட்டை வேடம் போடுபவர்கள் நாங்கள் அல்ல.
இவர்கள் ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்யப் பார்க்கிறார்கள். ஆனால் அயோத்தியில் என்ன ஆச்சு. அங்கு இந்தியா கூட்டணிதான் வெற்றி பெற்றது. அதேபோல் ராமர் கோயில் கட்டப்பட்ட தொகுதியிலும் இந்தியா கூட்டணிதான் வென்றது. தமிழ்நாட்டில் யார் ஆட்சி இருந்தால் தங்களக்கு நல்லது, பாதுகாப்பானது என்று இங்குள்ள மக்களுக்கு நன்கு தெரியும். இவர்களிடம் பா.ஜ.கவினரின் ஆன்மிக அரசியல் எடுபடாது.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையை இருக்கக்கூடாது என்று கூறுகிறார்கள். இந்து சமய அறநிலையத்துறை என்று ஒன்று இருப்பதால்தான் இன்று கோயில்களில் நிர்வாகம் சிறப்பாக இருக்கிறது. எந்த காலக்கட்டத்திலும் இல்லாத அளவிற்கு இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணி செய்துள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் முருகன் மாநாட்டில் பங்கேற்றது வெட்கக்கேடான விஷயம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை வைத்துக் கொள்வதற்கு தகுதியற்றவர்கள் அதிமுகவினர். திராவிடத்தை வீழ்த்துவோம் என்று சொல்லித்தான் இந்த முருகன் மாநாட்டை நடத்தி இருக்கிறார்கள். அ.தி.மு.கவின் கட்சி பெயரிலேயே திராவிடம் இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தூக்கத்தில் இருப்பதால் இதை மறந்துவிட்டார் போல். மற்றவர்களும் மறந்துவிட்டு பா.ஜ.கவின் சிறந்த கொத்தடிமைகள் நாங்கள் என்பதை நிரூபித்து அதிமுக மீண்டும் உணர்த்தியுள்ளது. பா.ஜ.கவுக்கு கிடைத்துள்ள அருமையான அடிமை அ.தி.மு.க.
அ.தி.மு.க, பா.ஜ.க கட்சிகளை நினைத்து கொண்டுதான் தமிழ்நாட்டில் ட்ரிபிள் இஞ்சின் சர்க்கார் அமையும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினாரா? அல்லது சி டீமை இணைத்து சொல்லி இருக்காரோ? என்றும் தெரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் எப்போதும் சிங்கிள் இன்ஜின் சர்கார். அந்த இன்ஜினை இயக்குபவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்"
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!