தமிழ்நாடு

”ஒரு நாள் கூத்து இது” : பா.ஜ.வின் முருகன் மாநாட்டிற்கு அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்!

பா.ஜ.க நடத்திய முருகன் மாநாடு ஒரு நாள் கூத்து என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.

”ஒரு நாள் கூத்து இது” :  பா.ஜ.வின் முருகன் மாநாட்டிற்கு அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

”அண்ணாமலைக்கு செல்வாக்கு உள்ளதா? நயினார் நாகேந்திரனுக்கு செல்வாக்கு இருக்கிறதா? என்று பா.ஜ.கவில் போட்டி நடக்கிறது. இந்த போட்டிக்காக நடந்த மாநாடுதான் முருகன் மாநாடு" என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு," மதுரையில் நேற்று நடந்த மாநாடு அரசியல் மாநாடு. அது ஒரு நாள் கூத்து. கூடிக் கலைந்த மேக கூட்டங்கள் போல் கலைந்த மாநாடு அது.

தமிழ்நாட்டிற்கும், பவன் கல்யாணுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. யார் அவர். சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்று பெற்று காட்டட்டும். பிறகு அவர் பேசட்டும். பா.ஜ.கவிடம் அடிமைசாசனத்தை எழுதி விட்டு நேற்று நடந்த முருகன் மாநாட்டில் அதிமுக தலைவர்கள் பங்கேற்று இருக்கிறார்கள்.

2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக சங்கீகள் கூட்டம் வேண்டுமா ? என்பதை தமிழ்நாட்டு மக்கள் முடிவெடுப்பார்கள். திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை 117 முருகன் கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது. 126 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடைபெறுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories