Tamilnadu
திராவிட மாடல் ஆட்சியில் மருத்துவத்துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலிட்டு பாராட்டிய தமிழ்நாடு அரசு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற நான்காண்டுகளில் திராவிட மாடல் அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை மாபெரும் சாதனைகளைத் தொடர்ந்து நிகழ்த்தி வெற்றிகளையும், விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்று இந்திய மாநிலங்களுக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு திராவிட மாடல் அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்களே சாட்சிகளாகும்.
சென்னை பெரியார் அரசு மருத்துவமனை :
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை கொளத்தூரில், பெரியார் நகரில் முக்கிய மருத்துவப் பிரிவுகளுடன் ஆறு தளங்களில் 560 படுக்கைகளுடன் உருவாக்கப்பட்ட அரசு பெரியார் மருத்துவமனையை 27.2.2025 அன்று திறந்து வைத்தார்கள்.
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை :
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 15.6.2023 அன்று திறந்து வைத்துள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை ரூ.240 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய 1,000 படுக்கைகள் மற்றும் 15 அறுவை சிகிச்சை அரங்குகளுடன் செயல்படத் தொடங்கியுள்ளது. ரூ.206.08 கோடி மதிப்பீட்டில் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 6,23,765 புறநோயாளிகள் மற்றும் 2,14,591 உள்நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை மேம்பாடு ரூ.34.6 கோடி செலவில் 15.3.2022 அன்று ரோபோடிக் அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டு சிறுநீரகவியல், புற்றுநோய் அறுவை சிகிச்சை, நாளமில்லா சுரப்பி அறுவை கிச்சை, இருதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சை, குடல் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு 336 நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை காரப்பேட்டை, காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிறப்பு மையம் ரூ.120 கோடி மதிப்பீட்டில் 750 படுக்கை வசதிகளுடன் தரை மற்றும் 2 தளங்கள் கொண்டதாகக் கட்டப்பட்டுள்ளது.
கூடுதலாக மூன்று தளங்கள் கட்ட ரூ.120 கோடி மதிப்பீட்டில் கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.32 கோடியில் சிறப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
சென்னை, கலைஞர் கருணாநிதி நகர், அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் ரூ.27.95 கோடி அனுமதிக்கப்பட்டு 3,84,422 புறநோயாளிகளும் 40,191 உள்நோயாளிகளும் பயனடைந்துள்ளனர்.
புதுக்கோட்டையில் புதிய அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ரூ.67.83 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருடத்திற்கு 50 மாணவர்கள் சேர்க்கையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
புற்றுநோய்ப் பரிசோதனை :
அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட 1,29,87,553 பேர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டு 5,29,545 நோயாளிகளுக்கு நோய் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
7.5 சதவீத இட ஒதுக்கீட்டு மருத்துவ மாணவர்களின் கல்விச் செலவு அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற 2382 மாணவ மாணவியர் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படித்திட ரூ.264.72 கோடி சுழல் நிதி உருவாக்கப்பட்டு அம்மாணவர்களின் கல்வி கட்டணம், உணவு கட்டணம், விடுதி கட்டணம் போன்ற செலவினத்தை திராவிட மாடல் அரசே ஏற்றுள்ளது.
மருத்துவக் கல்விக்கான இடங்கள் :
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகள் உட்பட மருத்துவம் தொடர்பான கல்லூரிகளில் சேர்வதற்காக அரசின் தேர்வுக் குழுவால் மருத்துவப் பிரிவில் 31,420, மருத்துவ பட்ட மேற்படிப்புப் பிரிவில் 7,961 மாணவர்கள், பல் மருத்துவப் பிரிவில் 7,496 மாணவர்கள், பல் மருத்துவப் பட்ட மேற்படிப்பு பிரிவில் 1,306 மாணவர்கள், மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் (Para Medical Degree Courses) 11,212 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு சேர்க்கைகள் நடைபெறுகின்றன.
ரூ.1115.24 கோடியில் புதிய மருத்துவமனைகள் :
ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத் திட்டத்தின் கீழ் மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி, சென்னை கீழ்ப்பாக்கம் மற்றும் ஆவடி ஆகிய இடங்களின் ஆறு புதிய மருத்துவமனைகளுக்கு ரூ.1115.24 கோடியில் கட்டடங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
ரூ. 151 கோடியில் இந்தியாவின் இரண்டாவது தேசிய முதியோர் நல மையம் கிண்டியில் ஒன்றிய அரசின் மானியத்துடன் ரூ.151.17 கோடி முதலீட்டில், 200 படுக்கைகளுடன் முதியோர்களின் மருத்துவப் பராமரிப்பிற்காகத் தனித்தன்மையுடன் தேசிய முதியோர் நல மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையம், புதுதில்லியில் அமைந்துள்ள AIIMS மருத்துவமனைக்கு அடுத்ததாக முதியோர்களுக்கான இரண்டாவது தனித்தன்மை வாய்ந்த மையமாகும்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் களப்பணியாளர்கள் :
ரூ.681.64 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீட்டில், இந்த மகத்தான திட்டம் 200 இலட்சம் பயனாளிகளைக் கடந்து, பொது சுகாதார சேவையில் மற்றொரு முக்கிய மைல்கல்லை அடைந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 2,34,88,431 பயனாளிகள் முதன்முறை சேவைகளையும் 4,52,62,337 பயனாளிகள் தொடர் சேவைகளையும் பெற்றுப் பயன் அடைந்துள்ளனர்.
பள்ளிச் சிறார் கண்ணொளி காப்போம் திட்டம் :
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே பார்வைக் குறைபாடுகள் கண்டறியப்பட்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் கண் மருத்துவ உதவியாளர்கள் மூலம் 1,24,10,834 பள்ளி குழந்தைகளுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு 13,11,637 கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.
ரூ.67.35 கோடியில் ‘தாய் சேய் நலப் பரிசுப் பெட்டகத் திட்டம் :
தாய் சேய் நல பரிசு பெட்டகத் திட்டம் அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பிரசவித்த தாய்மார்களுக்கு 16 வகை சுகாதார பொருள்கள் ரூ.67.35 கோடி நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்பட்டு 17,68,470 தாய்மார்கள் பயனடைந்துள்ளனர்.
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் :
2021-2022 ஆம் ஆண்டு முதல் 2024-2025 (31.03.2025) வரை இத்திட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் 5654 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 52,88,933 பேர் பயனடைந்துள்ளனர்.
புதியதாகத் தோற்றுவிக்கப்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் (UHWCs) 4,848 இடைநிலை சுகாதார பணியாளர்கள் (MLHPs) மற்றும் 2448 பலநோக்கு சுகாதார பணியாளர் நிலை-II ஆகியோர் ஒப்பந்த அடிப்படையில் அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தின் கீழ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இத்திட்டத்தின் மூலம் புறநோயாளிகளுக்கு 18,20,83,047 முறைகள் சோதனைகள் செய்யப்பட்டு மக்கள் பயனடைந்துள்ளனர்.
சுகாதார முகாம் (Health Mela) :
நலவாழ்வு மையங்கள் நடத்திய 3,79,853 சுகாதார முகாம்களின் மூலம் 6,39,83,382 முறைகளும், சமுதாய சுகாதார மையங்கள் நடத்திய 17,521 சுகாதார முகாம்களின் மூலம் 2,08,72,594 முறைகளும் சோதனை செய்யப்பட்டு மக்கள் பயனடைந்துள்ளனர்.
3755.53 கோடியில் மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகம் :
ஊட்டச்சத்து நலப் பெட்டகங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ், ரூ.1,149.24 கோடியில் 54,45,254 கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.2000 மதிப்பிலான ஒரு கர்ப்பிணிக்கு இரு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வீதம் 31,75,595 மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறைகளுடன் பிறக்கும் குழந்தைகள் நலன் :
குழந்தை பிறந்து 48 மணி நேரத்திற்குள் பரிசோதனை செய்வரின் மூலம், பரிசோதிக்கப்பட்ட 21,136 குழந்தைகளில், 413 குழந்தைகள் பிறவி குறைபாடுகளுடன் அடையாளங்காணப்பட்டு மேற்சிகிச்சைக்காக உயர் சிகிச்சை மையங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குழந்தை மரண வீதத்தைக் குறைத்து, நீண்டகால ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது.
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் (தொ.அ.ஈ.) :
16 மாவட்டங்களில் 19 புதிய தொ.அ.ஈ. மருந்தகம் தொடங்கப்பட்டு 71,832 காப்பீட்டாளர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் பயனடைகின்றன;
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை :
ரூ.32 கோடி செலவில், 110 இந்திய மருத்துவ முறை பிரிவுகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் ரூ.2 கோடி செலவில் 60 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவமனை நிறுவப்பட்டுள்ளது. ஓமியோபதி துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 59 சிகிச்சை உதவியாளர்கள் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவுகளில் சிகிச்சை உதவியாளர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 100 இந்தியமுறை மருத்துவமனைகள் ரூ.12.98 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ரூ.6 கோடி செலவில், 30 இந்திய மருத்துவ நிலையங்களில் வெளி நோயாளர்கள் பிரிவுகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. பழங்குடியினர் வாழும் 10 இடங்களில் நடமாடும் சித்த மருத்துவமனைகள் ரூ.94.25 இலட்சம் செலவில் திறக்கப்பட்டுள்ளன. ரூ.35.63 கோடி செலவில் பாளையங்கோட்டை, அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெறுகின்றன. ரூ.1.60 கோடி செலவில் சித்த மருந்துகள் உற்பத்தி செய்யும் நிலையம் சீரமைக்கப்பட்டுள்ளது. ரூ.5.09 கோடி மதிப்பீட்டில் சென்னை அரசினர் சித்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள 300 இந்திய மருத்துவ முறை மருத்துவ பிரிவுகள் ரூ.36.06 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
மருந்துக் கட்டுப்பாடு நிர்வாக இயக்குநரகம் :
மத்திய நிதியுதவி திட்டத்தின் கீழ் மாநில மருந்துகள் ஒழுங்குமுறை அமைப்பை வலுப்படுத்தல் மூலம் ரூபாய் 29.67 கோடி மதிப்பீட்டில் A மற்றும் B வகை மருத்துவ சாதனங்களை பரிசோதிப்பதற்காக பிரத்யேகமாக உலகத்தரம் வாய்ந்த மருந்துப் பரிசோதனை ஆய்வகம் ஒன்று கோயம்புத்தூரில் நிறுவப்பட உள்ளது.
7 மாவட்டங்களில் மருந்துக் கட்டுப்பாட்டு மண்டல அலுவலகத்திற்கு புதிய மருந்துகள் ஆய்வுக்கூடக் கட்டிடம் கட்ட ரூ.31.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சிறப்புப் படை அமைக்கப்பட்டு, திடீர் சோதனை நடத்தப்பட்டதில் மருத்துவரின் மருந்துச் சீட்டு இல்லாமலும் விற்பனை ரசீதுகள் இல்லாமலும் அடிமை மற்றும் போதை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்து பொருள்களை விற்பனை செய்த 59 மருந்து கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
திருவில்லிபுத்தூர் பகுதியில் 16 மருந்து கடைகள் மீதும், கருக்கலைப்பு மாத்திரைகளைத் தவறாகப் பயன்படுத்துதல் பற்றி திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் 19 மருந்து கடைகள் மீதும்; 522 கடைகளில் இருமல் மருந்துகளை மருந்து சீட்டு இல்லாமலும் விற்பனை இரசீதுகள் இல்லாமலும் விற்பனை செய்த குற்றத்திற்காக 37 கடைகள் மீதும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மருந்துகள் ஆய்வுக்கூடம், மதுரை :
மதுரையில் ரூ.20 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த மருந்துகள் ஆய்வுக்கூடம் அமைக்கப்படுகிறது.
தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் :
9 மருத்துவமனைகளில் டெலிகோபால்ட் கருவிகள், 3 மருத்துவமனைகளில் பிராகி தெரபி கருவிகள், சேலம் மற்றும் காரப்பேட்டை அறிஞர் அண்ணா நினைவு மருத்துவமனைகயில் LINAC கருவி, 5 மருத்துவமனைகளில் பெட் சிடி கருவிகள், 20 மருத்துவமனைகளில் 21 சி.டி கருவிகள், 19 மருத்துவமனைகளில் எம்.ஆர்.ஐ கருவிகள் என மொத்தம் 278.22 கோடி செலவில் நிறுவப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
தமிழ்நாடு சுகாதாரச் சீரமைப்புத் திட்டம் :
தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் (TNHSRP) உலக வங்கி நிதி ரூ.2,274.07 கோடி (70%), தமிழ்நாடு அரசு நிதி ரூ.974.60 கோடி (30%) ஆக மொத்தம் ரூ.3,248.67 கோடியில் செயல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாடு நகர்ப்புறச் சுகாதார திட்டம் :
ரூ.192.39 கோடியில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில், 22580 சதுர மீட்டர் பரப்பில் 22 நவீன அறுவை அரங்குகள் +1 ஹைப்ரிட் அறுவை அரங்கு மற்றும் 234 கூடுதல் படுக்கைகள் ஏழு தளங்களில் அமைக்கப்பட்ட அடுக்கு மாடிக் கட்டடம் கட்டப்பட்டு ரூ.125.46 கோடி செலவில் நவீன உயர் சிகிச்சை மருத்துவக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ரூ.200.66 கோடியில் சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஏழுதளங்கள் 24,973 சதுர மீட்டர் பரப்பில் 15 நவீன அறுவை அரங்குகள் +1 ஹைப்ரிட் அறுவை அரங்கு மற்றும் 441 கூடுதல் படுக்கைகளுடன் அடுக்கு மாடிக் கட்டடம் கட்டப்பட்டு ரூ.162.21 கோடி செலவில் நவீன உயர் சிகிச்சை மருத்துவக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அரசு கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ரூ.169.11 கோடி செலவில் 20617 சதுர மீட்டர் பரப்பில் 7 தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் கட்டிடத்தில் 10 நவீன அறுவை அரங்குகள் மற்றும் 277 கூடுதல் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இம்மருத்துவமனைக்கு ரூ.122.60 கோடி செலவில் நவீன உயர் சிகிச்சை மருத்துவக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
திருவள்ளுர் மாவட்டம், ஆவடி அரசு மருத்துவமனையில் – 5040.45 சதுர மீட்டர் பரப்பில் ரூ.38.74 கோடி செலவில் 4 தளங்களில் மூன்று நவீன அறுவை அரங்குகள், தீவிர கண்காணிப்பு பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு மற்றும் 80 படுக்கைகள் கொண்ட அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டு, ரூ.10.12 கோடி செலவில் நவீன உயர் சிகிச்சை மருத்துவக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் அரசு மருத்துவமனையில், 5780 சதுர மீட்டர் பரப்பில் ரூ.41.95 கோடி செலவில் 4 தளங்களில் மூன்று நவீன அறுவை அரங்குகள், தீவிர கண்காணிப்பு பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு மற்றும் 91 படுக்கைகளும் கொண்ட அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டு ரூ.6.73 கோடி செலவில் நவீன உயர் சிகிச்சை மருத்துவக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டம் அரசு அம்மாபேட்டை புறநகர் மருத்துவமனையில், 5,725 சதுர மீட்டர் பரப்பில் ரூ.40.19 கோடி செலவில் 3 தளங்களில் மூன்று நவீன அறுவை அரங்குகள், தீவிர கண்காணிப்பு பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு மற்றும் 85 படுக்கைகளும் கொண்ட அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டு ரூ.6.13 கோடி செலவில் நவீன உயர் சிகிச்சை மருத்துவக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டம் அரசு கண்டியப்பேரி புறநகர் மருத்துவமனையில், 5,636 சதுர மீட்டர் பரப்பில் ரூ.40.84 கோடி செலவில் 3 தளங்களில் மூன்று நவீன அறுவை அரங்குகள், தீவிர கண்காணிப்பு பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு மற்றும் 105 படுக்கைகளும் கொண்ட அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மேலும், இம்மருத்துவமனைக்கு ரூ.6.79 கோடி செலவில் நவீன உயர் சிகிச்சை மருத்துவக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.200.98 கோடியில் நவீன உயர் தொழில்நுட்ப மருத்துவக் கருவிகள் வழங்கப்பட்டு 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 3 மாவட்ட தலைமையக மருத்துவமனைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் :
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 81,33,806 பயனாளிகள் ரூ.5,878.85 கோடி காப்பீட்டு தொகையில் பயனடைந்துள்ளனர். இதில் அரசு மருத்துவமனைகளில் 25,80,867 பயனாளிகளுக்கு ரூ.2,750.28 கோடி காப்பீட்டு செலவில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம் :
தமிழ்நாட்டின் எல்லைக்குள் விபத்தில் முதல் 48 மணி நேரத்திற்குள் காயமடைவோர் அனைவருக்கும் இலவச சிகிச்சை வழங்கும் நம்மை காக்கும் - 48 திட்டத்தில் வெளிநாட்டவர், வெளி மாநிலத்தார் உட்பட அனைவருக்கும் சிகிச்சை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 7,40,548 பயனாளிகளுக்கு 348.84 கோடி ரூபாய் செலவில் சிகிச்சை அளிக்கபட்டும்; அரசு மருத்துவமனைகளில் 3,55,741 பயனாளிகளுக்கு 299.28 கோடி ரூபாய் செலவில் சிகிச்சை வழங்கப்பட்டும் .அவர்களின் இன்னுயிர்கள் காக்கப்பட்டுள்ளன.
108 – அவசர கால மேலாண்மை சேவைகள் :
108 ஊர்தி சேவைத் திட்டத்தின் மூலம் கர்ப்பிணித்தாய்மார்கள் 19,43,335 பேர், சாலை போக்குவரத்து விபத்துக்குள்ளானவர்கள் 13,59,565 பேர், இதர அவசரகால பயனாளிகள் 46,82,428 என 79,85,328 பேர் பயனடைந்துள்ளனர்.
102 - இலவச தாய்சேய் நல ஊர்தி சேவை (JSSK) :
18 ஜனவரி 2024 மற்றும் பிப்ரவரி 4, 2025 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 49 இலவச தாய்சேய் நல ஊர்திகள் சேவைத் திட்டம் தொடங்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் 10,51,941 பிரசவித்த தாய்மார்கள் தாய் சேய் நல ஊர்திகள் மூலம் பயனடைந்துள்ளனர்.
155377 – இலவச அமரர் ஊர்தி சேவை :
38 மாவட்டங்களுக்கு இயக்கப்படும் 195 இலவச அமரர் ஊர்தி வாகனங்கள் மூலம் 6,42,190 இறந்தவர்களின் உடல்கள் அவர்களின் இல்லங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் :
இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தொடங்கிய உடல் உறுப்பு தானப் பிரிவில் 749 நன்கொடையாளர்களிடமிருந்து 310 இதயம், 369 நுரையீரல், 632 கல்லீரல், 1,292 சிறுநீரகம் என மொத்தம் 4,300 உறுப்புகள் மற்றும் திசுக்கள் பெற்று பலருக்கும் பயன்படுத்தப்பட்டன. மூளைச்சாவு அடைந்த உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச் சடங்குகளில் அரசு மரியாதை செலுத்தப்படுகிறது.
தேசிய அளவில், தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சையில் சிறப்பாக செயல்பட்டதற்காகவும் மற்றும் 2023இல் எட்டாவது முறையாகவும், ஒன்றிய அரசின் தேசிய விருதை தமிழ்நாடு பெற்றுள்ளது.
நீரிழிவு பாத மருத்துவ மையம் நிறுவுதல் :
537 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரூ.2.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு; “பாதம் பாதுகாப்போம் திட்டத்தின் கீழ் 2,336 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 100 அரசு மருத்துவமனைகள் மற்றும் 35 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பாத பரிசோதனை சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
15 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், ரூ.17.46 கோடி செலவில் நீரிழிவு கால் அறுவை சிகிச்சை சேவைகளை வலுப்படுத்த தேவையான உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 24,50,708 நீரிழிவு நோயாளிகளின் பாதங்கள் பரிசோதனை செய்யப்பட்டு 24,117 நோயாளிகளுக்கு தக்க சமயத்திலான சிகிச்சைகளால் கால் இழப்புகள் தடுக்கப்பட்டன.
பல்நோக்கு சிறப்பு மருத்துவ சேவைகள் :
128 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ சேவைகள் பிரிவு நிறுவப்பட்டு 17,25,158 மக்கள் பயன் பெற்றுள்ளனர்.
ஊட்டச்சத்து :
“ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின்மூலம் 16,253 மிக குறைவான ஊட்டச்சத்து குறைபாடு (SAM) உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு, தேவையான ஊட்டச்சத்து வழங்கப்பட்டு அவர்களின் இயல்பான வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வழி வகுக்கப்பட்டது.
தமிழ்நாடு மாநில பார்வை இழப்பு தடுப்பு சங்கம் :
10,40,929 நோயாளிகளுக்கு அவசரகால முற்றிய கண் புரை அறுவை சிகிச்சைகள் 93 அரசு மருத்துவமனைகள், 91 தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு செயற்கை IOL சென்ஸ் இத்திட்டத்தின் கீழ் பொருத்தப்பட்டுள்ளது. 36 கண் வங்கிகள் மூலம் 34,330 கண்கள் தானமாகப் பெறப்பட்டு கண் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு இணைய செயலி உருவாக்கியதின் மூலம் சென்ற ஆண்டு சுமார் 10,000 கண் கொடையாளர்கள் தங்கள் கண்களைத் தானம் செய்வதற்குப் பதிவு செய்துள்ளனர்.
பள்ளி சிறார்களுக்கு கண் பரிசோதனை செய்து சுமார் 8,22,232 மாணவர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.
அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தின் கீழ் செய்த சாதனைகள் :
அனைவருக்கும் நலவாழ்வு திட்டமானது (UHC) 4,848 துணை சுகாதார நிலையங்கள், 1,384 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 460 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 650 ஆயுஷ் ஆரம்ப சுகாதார நிலையங்கள் நலவாழ்வு மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. நகர்ப்புறத்தில் 500 நகர்ப்புற மருத்துவ நலவாழ்வு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 7,842 சுகாதார நிலையங்களை அரசு வெற்றிகரமாக நலவாழ்வு மையங்களாக மாற்றியுள்ளது. 12 விரிவான சுகாதார சேவைகளை வழங்கி வருகிறது.
செவிலியர் (Staff Nurse) தகுதிக்கு இணையான இடைநிலை சுகாதார பணியிடங்கள் உருவாக்கப்பட்டு (MLHP) 4,848 துணை சுகாதார நிலையங்களில் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒன்றிய அரசின் பரிசுகளைப் பெற்ற குழந்தை நலம் :
2008ஆம் ஆண்டில் 10ஆக இருந்த சிறப்பு பச்சிளங் குழந்தை பராமரிப்பு பிரிவுகள் (SNCU) எண்ணிக்கையை 2024-2025 ஆம் ஆண்டில் 88ஆக உயர்த்தப்பட்டது. குழந்தை இறப்பு விகிதம் (IMR) கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குழந்தை இறப்பு விகிதத்தை (IMR) 1,000 பிறப்புகளுக்கு 28ஆக இருந்த தேசிய சராசரியிலிருந்து தமிழ்நாடு 2024 மாநில அறிக்கையின் படி 8 ஆகக் குறைக்கப்பட்டு மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ளது.
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) :
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 4634 உதவி மருத்துவர்கள், 27 செவிலியர்கள், 2772 இதர மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் உள்ளடக்கிய 7433 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2024-2025 ஆண்டில் 7 பதவிகளுக்கு மொத்தம் 4080 பணியாளர்களும், 2025-2026 ஆண்டிற்கான பதவிகளில் இதுவரை 4 பதவிகளுக்கு மொத்தம் 115 பணியாளர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2025 ஆண்டிற்கான மீதமுள்ள 20 பணி பிரிவுகளில் 9722 பணியிடங்களுக்கான தேர்வுகள் 2025 டிசம்பர் மாதத்திற்குள் முடித்திட பணிகள் நடைப்பெற்று வருகின்றன. 78 இளநிலை உதவியாளர்கள், 10 தட்டச்சர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு பெற்றுள்ள 525 சாதனை விருதுகள் :
கிராமப் புறங்களில் பொது மருத்துவம் சிறப்பு சேவைக்கான விருது, காசநோய் இல்லாத நிலையை தமிழ்நாட்டில் உருவாக்கி கண்டுள்ள முன்னேற்றம் என்பதற்கான விருது, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சிகிச்சை வழங்குவதில் சிறப்பு விருது, மலேரியா தடுப்பு சிறந்த நடவடிக்கைக்கான தேசிய விருது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறந்த செயல்பாடுகளுக்கான விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளது தமிழ்நாடு.
தமிழ்நாடு அரசின் உறுப்பு தான பிரிவு 6 ஆண்டுகளாக தொடர்ந்து இந்தியாவின் சிறந்த பிரிவு என பாராட்டப்பட்டு தேசிய அளவில் விருதுகளை பெற்று வருவதுடன் கடந்த 4 ஆண்டுகளில் மக்கள் நல்வாழ்வு துறையில் தமிழ்நாடு நிறைவேற்றி வரும் புதிய புதிய திட்டங்களால் தொடர்ந்து தேசிய அளவில் பாராட்டுகளை பெற்று விருதுகளை குவித்து வருகிறது. அந்த வகையில் திராவிட மாடல் அரசு மொத்தம் 525 விருதுகளை பெற்றுள்ளதன் மூலம் இந்தியாவின் மிக சிறந்த மாநிலம் தமிழ்நாடு பாராட்டப்படுகிறது.
இப்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு மக்கள் நலன் காப்பதில் ஓய்வின்றி உழைத்து. திட்டங்களை விழிப்புடன் செயல்படுத்தி தமிழ்நாடு இந்தியாவின் சிறந்த மருத்துவ மாநிலமாக எழுச்சி பெற்றுள்ளது. மருத்துவ உதவிகளை நாடி அயல் நாடுகளுக்கு சென்ற நிலை மாறி இன்று அயல் நாட்டினர் மருத்துவத் தேவைகளுக்காக தமிழ்நாட்டைத் தேடி வருவது தமிழ்நாடு பெற்றுள்ள தனிப் பெருமை ஆகும். இது திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளில் தலை சிறந்த சாதனை ஆகும்.
Also Read
-
“அவதூறு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து நீலிக்கண்ணீர் வடிக்கிறார் பழனிசாமி” : அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி!
-
சென்னை பறக்கும் ரயில் நிறுவனத்தை மெட்ரோவுடன் இணைப்பது எப்போது? - கனிமொழி MP கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்!
-
"திராவிட மாடல் ஆட்சியில் கோயம்புத்தூர், மதுரை IT நகரங்களாக உருப்பெறுகிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
இனி பேரிடர் குறித்து கவலையில்லை... நாசாவுடன் சேர்ந்த இஸ்ரோ : விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள் !
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம் : "நாடாளுமன்றம் முடிவு செய்யட்டும்" - உச்சநீதிமன்றம் கருத்து !