Tamilnadu
“அன்னைத் தமிழ் காப்பதற்கு ஆவி தரவும் தயங்கிடோம்” : கலைஞரின் பொன்மொழிகள்! #KalaignarQuotes
தமிழ்நாட்டின் தனிப்பெருந்தலைவராக மட்டுமின்றி, இந்தியத் திருநாடே வியந்து போற்றிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழாவை தமிழ்நாடு முழுவதும் நாளை (03.02.2025) திமுகவினர் கொண்டாடவுள்ளனர்.
* கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாதென்பதற்காக அல்ல. கோவில் கொடியவரின் கூடாரமாய் இருக்கக் கூடாதென்பதற்காக!
* அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள் ?
* நீதி தவறிய பாண்டியன் நெடுஞ்செழியனே... உனக்கு செங்கோல் எதற்கு? மணிமுடி எதற்கு? வெண்கொற்றக் குடை எதற்கு?
* படிச்சவன் பட்டணத்துல போய் உட்கார்ந்துக்கிட்டு எதாச்சும் பதவி போஸ்ட்டுகள தேடிக்கிட்டு தன்னையும் ஒரு உயர்ந்த ஜாதிக்காரன் மாதிரி பாவ்லா பண்ணிக்கிறானே தவிர, அவனால இந்த சமுதாயத்துக்கு ஒரு செல்லாக்காசு பயன் கூட கிடையாது.
* வாழ்க்கையை ஒரு போராட்டம் என வர்ணிப்போர் உளர்!எனக்கோ போராட்டமே வாழ்க்கையாகிவிட்டது.
* எனக்கென்று ஒரு தனி வாழ்க்கை கிடையாது. ஒரு இலட்சியத்தை மையமாகக் கொண்டு சுழலும் இயக்கத்தின் வரலாற்றில் நான் ஒரு பகுதி.
* நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும்!
இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்!
* வீரன் ஒருமுறைதான் சாவான்; கோழை பலமுறை சாவான் என்பார்கள். ஒரு திருத்தம். வீரன் சாவதே இல்லை. கோழை வாழ்வதே இல்லை.
* ஆதிக்கம் செலுத்துகிற மொழி குயிலாகக் கூவி வந்தாலும்-மயிலாக ஆடி வந்தாலும் மயங்கிடோம். அன்னைத் தமிழ் காப்பதற்கு ஆவி தரவும் தயங்கிடோம்.
* மனச்சாட்சி உறங்கும் போது தானே மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது.
* உலகத்திலேயே மலிவானது உபதேசம் ஒன்றுதான். உபதேசிகள் பலர் அதனை மலிவாக விற்றுவிட்டுத் தங்கள் கடையைக் காலியாக வைத்திருப்பார்கள்.
* பெரும்பான்மை, உடலைப் போன்றது.சிறுபான்மை, கண்களைப் போன்றது.உரிமைகள் அனைத்தும் பெரும்பான்மைக்குத்தான் என்று சொல்லி சிறுபான்மையினரைப் புறக்கணிப்பது; கண்களைக் குத்திக் கொள்கிற குருட்டுச் செயலாகும்.
* இசைக்கு மொழி இல்லை: ஆனால் மொழிக்கு இசை தேவை. அதனால்தான் தமிழிசை இயக்கம் தோன்றியது.
* நாம் - ஜனநாயகம். நான் - சர்வாதிகாரம்.
Also Read
-
Reels Shoot செய்யும் Dummy CM, எப்போது தான் குற்றங்களை கட்டுப்படுத்துவார்? : உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
எங்கள் ஆட்சியில் என் மீது புகார் கொடுத்தவன் யார்? : காவல் நிலையத்தில் ரகளை செய்த த.வெ.க நிர்வாகி!
-
த.வெ.க அரசாங்கத்தின் அராஜகம் ; விஜய் சர்க்கார், போலீஸ் சர்க்கார் - முரசொலி விமர்சனம்!
-
Asian Para Games 2026 : ஒரே நாளில் அடுத்தடுத்து.. பதக்கங்களை அள்ளி குவித்த துளசிமதி முருகேசன்!
-
தலைகீழாக நடந்த SIR பணி மூலம் தேர்தல் முறை சீர்குலைந்துள்ளது! : அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக கண்டனம்!