Tamilnadu
தமிழ்நாட்டில் ஜூன் 19 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் : 6 MP-க்கள் பதிவுக் காலம் முடிவு - யார் அவர்கள்?
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் தி.மு.கவை சேர்ந்த எம். சண்முகம், எம்.எம்.அப்துல்லா, பி.வில்சன், அதிமுகவைச் சேர்ந்த என்.சந்திரசேகரன், பா.ம.க அன்புமணி ராமதாஸ் ஆகிய 6 பேரின் பதிவுக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் இந்த 6 இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் ஜூன் 9 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என்றும் ஜூன் 12 ஆம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெற கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வேண்டும். திமுக கூட்டணிக்கு 159 உறுப்பினர்கள் உள்ளனர். அதிமுக கூட்டணிக்கு 75 உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் திமுக கூட்டணிக்கு 4 மாநிலங்களவை உறுப்பினர்களும், அதிமுக கூட்டணிக்கு 2 மாநிலங்களவை உறுப்பினர்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மாநிலங்களவை பதவிக்கு போட்டி நடைபெறும் பட்சத்தில் ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும்.
Also Read
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!