Tamilnadu
3390 தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.1.99 லட்சம் கோடி முதலீடு- 8.79 லட்சம் வேலைவாய்ப்பு: அசத்தும் திமுக அரசு!
சென்னை, ஸ்ரீபெரும்புதூர் புத்தாக்க மையத்தில் இன்று சிப்காட்நிறுவனம் ,அதன் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தமிழ்நாடு மாநிலஉயர்கல்வி மன்றத்துடன் (Tamil Nadu State Council For Higher Education-TANSCHE) இணைந்து திறன் மேம்பாட்டிற்கான ஆற்றலை கண்டறியும் கூட்டம் சிப்காட் மேலாண்மை இயக்குநர் கே.செந்தில் ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய கே.செந்தில் ராஜ்,” சிப்காட் நிறுவனம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய பங்காற்றி வருகிறது. இதுவரை 24 மாவட்டங்களில் 50 தொழிற் பூங்காக்களை 48,926.48 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கி 3,390 தொழில் நிறுவனங்களின் மூலம் 1.99 இலட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்து 8.79 இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளது.
உயர்கல்விக்கும், தொழில் நிறுவனங்களில் திறன்மிகு வேலைகளின் ஆற்றலுக்குமான இடைவெளியை குறிப்பாக நிலை 2 மற்றும் நிலை 3 நகரங்களில் பயின்றுவரும் மாணவர்களிடத்தில் சீர்செய்வதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும். ஆர்வமுள்ள மாணவர்கள் பயிலும்போதே கண்டறியப்பட்டு தொழில் நிறுவனங்களின் உதவியுடன் Learning Management System (LMS) மூலம் குறிப்பிட்ட தொழில் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும்.
தொழில் நிறுவனங்களில் இருந்து வளர்ந்து வரும் பணிகளின் தன்மை, திறன்மிகு பணிக்கான ஆற்றல் பெறப்பட்டு முற்போக்கான, சுயந்தேறல் மாடுல்கள் (Self-paced Modules) மூலம் பாடதிட்டம் வடிவமைக்கப்படும். மாணவர்கள் முதலாம் ஆண்டு இறுதியில் விருப்பமான பிரிவினை தேர்ந்தெடுத்து அதில் நிலையான மதிப்பீட்டினை பெறலாம். இந்த முன்னெடுப்பின் மூலம் மாணவர்கள் இணைப்பு பயிற்சி (Internship) திறன் ஆற்றல் மற்றும் பணியிடு திறன் குழுமத்தில் (Empanelled Talent Pool) பங்குபெறும் வாய்ப்பினை பெறுவர்.
தொழில் நிறுவனங்கள் பணியாளர்கள் சேர்ப்பிற்கு பின் பயிற்சியில் செலவிடும் தொகையினை குறைப்பதற்கும், திறன்மிகு பணியாளர்களை ஆரம்ப நாட்களிலேயே பெருவதற்கும் ஏதுவாக அமையும். கல்வி துறையும், தொழில் துறையும் இணைந்து உருவாக்கும் திறன் மேம்பாட்டு மாதிரி (Talent Development Model) தனித்துவம் வாய்ந்தது.
இந்த முன்னெடுப்பு நடவடிக்கையின் குறிக்கோள், தொழில் நிறுவனங்களுக்கு கிடைக்கும் பயன்கள், திட்டத்தினை செயலாக்கும் முறை பற்றி தொழில் நிறுவனங்கள் மற்றும் அதன் குழுமங்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது என்பது சிறப்புக்குரிய ஒன்றாகும்.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 5 சிப்காட் தொழிற் பூங்காக்களில் இருந்து சுமார் 100 நிறுவனங்கள் கலந்துகொண்டு திறன்மிகு தொழிலுக்கான பயிற்சியினை வடிவமைப்பதற்கு ஏதுவாக பணிகளின் தன்மை, திறன்மிகு பணிக்கான ஆற்றல் மற்றும் மதிப்பீடு குறித்து பங்கேற்பாளர்களின் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
எனவே, தமிழ்நாடு தொழில்துறையில், இந்த முன்னெடுப்பின் மூலம் திறன்மிகு வேலைக்கான பணியாளர்களை கண்டறிவதில் இலட்சியமாக தன்னிறைவு பெரும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
"ஆளுநர்கள் கால வரம்பு இல்லாமல் மசோதாக்களை நிலுவையில் வைக்க முடியாது" - தலைமை நீதிபதி கருத்து !
-
Twist வைத்த Bigg Boss; கதறி அழுத சாண்ட்ரா... BB வீட்டில் இருந்து வெளியேறும் பிரஜின்?
-
திட்டங்களால் பயனடைந்த லட்சக்கணக்கான மாணவர்கள்... திராவிட மாடல் ஆட்சியில் ஜொலிக்கும் பள்ளிக்கல்வித்துறை !
-
4 தென் மாவட்டங்களுக்கு Orange Alert.. 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... என்னென்ன பகுதிகள்? - விவரம்!
-
”முதலமைச்சருக்கு தாய்மார்கள் எப்போதுமே பக்கபலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்...” -துணை முதலமைச்சர்!