Tamilnadu
“விவசாயிகளை தொழில்முனைவோர்களாக மாற்றிட வேண்டும்..” ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் MRK பன்னீர்செல்வம்!
13.05.2025 அன்று வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் முன்னெடுப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் வ.தட்சிணாமூர்த்தி இ.ஆ.ப., வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, ஆணையர் த.ஆபிரகாம் இ.ஆ.ப., வேளாண்மை துறை இயக்குநர், பி.முருகேஷ் இ.ஆ.ப., சர்க்கரை துறை இயக்குநர் தா.அன்பழகன் இ.ஆ.ப., தமிழ்நாடு நீர்வடி பகுதி மேம்பாட்டு முகமை துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஏ.பி.மஹாபாரதி இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் தமிழ்நாட்டின் உணவு பதப்படுத்தல் மற்றும் இந்திய அளவில் தமிழ்நாட்டின் வேளாண் ஏற்றுமதி நிலை குறித்து விளக்கினார். வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டை ஏற்றுமதியில் முதன்மை மாநிலமாக மாற்றிட புதிய திட்டங்களை வகுக்க அறிவுறுத்தினார்.
வேளாண் பொருட்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்ய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தினார். மேலும் தமிழ்நாட்டில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் வேளாண் விளைபொருட்களான அரிசி, முருங்கை, மாம்பழம், பலாப்பழம் மற்றும் மிளகாய் போன்ற பொருட்களுக்கு மதிப்பு சங்கிலி உருவாக்குதல் குறித்தும் மற்றும் ஏற்றுமதி செய்வதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.
தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் அதிகாரிகளை மாவட்ட அளவில் சென்று விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்களை நேரில் சந்தித்து ஏற்றுமதியில் உள்ள சவால்களைக் கண்டறிந்து வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் அதிகாரிகளை மாவட்டம் தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு வேளாண் ஏற்றுமதி மற்றும் உணவு பதப்படுத்துதல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தினார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் வேளாண் விளைபொருட்களுக்கு ஏற்ப சந்தைத் தேவைகளை கண்டறிந்து ஏற்றுமதிக்கு ஏற்ற பயிர்கள் சாகுபடி குறித்தும் மற்றும் விளைபொருட்களை மதிப்புகூட்டுதல் மற்றும் ஏற்றுமதி செய்ய விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் தொழில் தொழில்முனைவோர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய அறிவுறுத்தினார்.
மாவட்டம்தோறும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் நிறுவப்பட்டுள்ள உளர்களங்கள், சேமிப்புகூடங்கள் மற்றும் அதைச்சார்ந்த கட்டமைப்புகளை விவசாயிகள், தொழில்முனைவோர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் உணவு பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதிக்கு பயன்படுத்த ஊக்குவிக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் அவர்கள் விவசாயிகளை தொழில்முனைவோர்களாக மாற்றிடவும், தமிழ்நாட்டில் புதிய ஏற்றுமதியாளர்கள் உருவாக்குதல் மற்றும் அதிக அளவில் வேளாண் விளைபொருட்களை ஏற்றுமதி செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் அதிகாரிகள் செயல்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.
Also Read
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
மூளையை தின்னும் அமீபா வைரஸ் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!