Tamilnadu

”சாதி-மதம்-நிறம் என சிந்திகாத தூய உள்ளங்கள் செவிலியர்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

மருத்துவத்துறையில் செவிலியர்களின் பங்கு மிகவும் அளப்பரியது. நோயாளிகளிடம் கனிவோடும், அன்போடும், பண்போடும் நடந்து கொள்பவர்கள் செவிலியர்கள். உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கிக் தவித்த பொது தங்களது உயிரையும் துச்சமென நினைத்து சேவையாற்றினார்கள். இவர்களது சேவையை யாரும் மறக்க முடியாது.

இன்று உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் செவிலியர்களுக்கு வாழ்த்துக்களை கூறிவருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் உலக செவிலியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் சமூகவலைதள பதிவில், "தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி-மதம்-நிறம் என எதைப் பற்றியும் சிந்திக்காமல் அனைவரையும் ஒன்றுபோலக் கருதி, அன்புடன் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களான செவிலியர்கள் அனைவருக்கும் உலக செவிலியர் தின வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

Also Read: “தேசம் காக்கும் களத்திலும் முன்னணித் தளபதியாக நிற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி!