Tamilnadu

”அதானி, அம்பானிக்காக மட்டுமே வேலை பார்க்கும் மோடி” : கனிமொழி MP குற்றச்சாட்டு!

ஜனநாயக விரோதமா எதிர்க்கட்சிகளை புறக்கணித்து விட்டு நாட்டிற்கு உதவாத சட்டங்களை ஒன்றிய பா.ஜ.க அரசு நிறைவேற்றி வருகிறது என கனிமொழி எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி "பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசு நாட்டின் இறையாண்மை சிதைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. அண்ணல் அம்பேத்கர் உருவாக்கி கொடுத்திருக்கும், அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி அமைத்திட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது.

மேலும், சாமானிய மக்களுக்கு எதிரான சட்டங்களை ஒன்றிய பா.ஜ.க அரசு உருவாக்கி வருகிறது. அதேபோல் ஜனநாயகத்திற்கு மாநில உரிமைகளை தட்டிப்பறிக்கக் கூடிய செயலை செய்து வருகிறார்கள். எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிட்டு வருகிறார்கள்.

ஆளுநர்களின் அடாவடித் தனத்திற்குத்தான் உச்ச நீதிமன்றத்தின் வாயிலாக கொட்டு வைத்து இருக்கிறார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இப்படி மாநில உரிமைகளை நிலைநாட்ட தி.மு.க துணிச்சலுடன் செயல்பட்டு வருகிறது.

சிறுபான்மை மக்களுக்கு எதிரான திட்டங்களை வகுத்து அவர்களை அச்சுறுத்தி வருகிறார்கள். வக்ஃப் வாரி சட்டத்தை அமல்படுத்தி இஸ்லாமிய மக்களின் சொத்துக்களை பறிக்க ஒன்றிய அரசு முயற்சித்து வருகிறது. இவர்களது திட்டங்களை முறியடித்து சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் திமுக துணை நிற்கும். காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

நாட்டு மக்களை காப்பாற்ற துப்பில்லாத ஒன்றிய அரசு, அம்பானி மற்றும் அதானியை பாதுகாக்கிறது.இந்த இருவருக்காக மட்டுமே மோடி உழைத்து வருகிறார். இந்தியநாடு காப்பாற்றப்பட வேண்டும், நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் ஒன்றிய பா.ஜ.க ஆட்சி முடிவுக்கு வரவேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: "பழனிசாமியின் அரசியல் அத்தியாயம் 2026 சட்டப்பேரவைத் தேர்தலோடு முடியும்" - ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் !