Tamilnadu
”அமைச்சராக மீண்டும் பதவியேற்றார் மனோ தங்கராஜ்” : ஒதுக்கீடு செய்யப்பட்ட இலாகா என்ன?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரைவையில், அமைச்சர்களாக இருந்த செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் ராஜினாமா செய்தனர். இந்த ராஜினாமாவை ஆளுநர் ரவி ஏற்றுக்கொண்டதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி தமிழ்நாடு அமைச்சரவையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோரின் துறைகள், மற்ற அமைச்சர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.
* போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக மின்சாரத்துறையும்
* வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறையும்
* ராஜகண்ணப்பனுக்கு வனத்துறை மற்றும் காதி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் பால்வளத்துறை அமைச்சராக இருந்த னோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்படுகிறது. அவர் ஏற்கனவே இருந்த பால்வளத்துறையே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதிய அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்றார். அவர்களுக்கு பதவிப்பிரமாணத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து வைத்தார்.
Also Read
-
தமிழ்நாடு எதற்கெல்லாம் போராடும்... ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி !
-
கரூருக்கு முன்னர் நாமக்கல்லில் ஏற்பட்ட பெரிய அசம்பாவிதம்- கள அனுபவத்தை விவரிக்கும் பேரா.பெருமாள்முருகன்!
-
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நாடகம்.. தடுத்து நிறுத்திய ஆசிரியர்கள்.. குவிந்த கண்டனம்.. கேரள அமைச்சர் அதிரடி!
-
முதுபெரும் எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் மறைவு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
பதைபதைக்க வைக்கும் வீடியோ.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. விஜய் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது பாய்ந்த வழக்கு!