Tamilnadu
அமைச்சரவையில் மாற்றம்... செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா ஏற்பு.. மீண்டும் அமைச்சராகும் மனோ தங்கராஜ்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரைவையில், அமைச்சர்களாக இருந்த செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் ராஜினாமா செய்தனர். இந்த ராஜினாமாவை ஆளுநர் ரவி ஏற்றுக்கொண்டதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி தமிழ்நாடு அமைச்சரவையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோரின் துறைகள், மற்ற அமைச்சர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது,
* போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக மின்சாரத்துறையும்
* வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறையும்
* அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வனத்துறை மற்றும் காதி துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதே போல் முன்னாள் பால்வளத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்படுகிறது. புதிய அமைச்சருக்கு நாளை மாலை ராஜ்பவனில் பதவிப்பிராமணம் நிகழ்ச்சி நடைபெறும்.
Also Read
-
முத்தமிழறிஞர் கலைஞரின் மகன் மு.க.முத்து அவர்களின் உடல் தகனம்.... அரசியல் தலைவர்கள் மரியாதை !
-
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி... ரூ.21 கோடி அபராதம், 261 தொழிற்சாலைகள் மூடல்: தமிழ்நாடு அரசு தகவல்!
-
இலங்கை தமிழர்களின் கவனத்துக்கு... திருமணத்தை பதிவு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு : விவரம் உள்ளே !
-
மீண்டும் புறநகர் ரயில் சேவையில் பாதிப்பு... பாதிக்கப்படும் பொதுமக்கள்- தவறை சரி செய்யுமா தெற்கு ரயில்வே?
-
”கலைத்துறையில் முத்திரை பதித்தவர் மு.க.முத்து” : அரசியல் கட்சி தலைவர்கள் புகழஞ்சலி!