Tamilnadu

மூக்குடைபட்டும் திருந்தாத ஆளுநர் ஆர்.என்.ரவி : வைகோ கண்டனம்!

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல், மீண்டும் தனது ஆணவப்போக்கோடு ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்தி இருக்கிறார். ஆளுநரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு அரசியல் செய்யும் ஆர்.என்.ரவியை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி சென்னையில் மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் வைகோ கண்டன உரையாற்றினார்.

அப்போது பேசிய வைகோ, "ஜனநாயகத்தின் அடித்தளம் என்பது சிறுபாமையினரை பாதுகாப்பதுதான். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அனைத்து மதங்களும் தன்னுடைய உரிமையை இழக்கும் நிலை ஏற்படும். இந்தியாவின் ஒருமைப்பாடு காப்பாற்றப்படாது.

பெரியார், அண்ணா, கலைஞர் பெயர்களை சட்டமன்றத்தில் உச்சரிக்க மாட்டேன் என்று சொல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் மூக்குடைபட்ட பிறகும் கூட, துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துகிறார் ஆளுநர். பா.ஜ.கவின் ஏஜெண்டாக செயல்படும் ஆர்.என்.ரவியை ஆளுநர் அலுவலகத்தில் வைத்து கொண்டு அரசியல் செய்யாமல், உங்களது கட்சி அலுவலகத்திலேயே வைத்துக் கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.

Also Read: “அன்றைய வாஜ்பாய் காலத்துக்கும், இன்றைய மோடி காலத்துக்கும் இதுதான் வித்தியாசம்!” : முரசொலி விளக்கம்!