Tamilnadu
தனியார் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து : பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கி முதலமைச்சர் உத்தரவு !
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், நெடுங்குளம் கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், நெடுங்குளம் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (26.4.2025) காலை சுமார் 10.45 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் எம் புதுப்பட்டி, சொக்கம்பட்டியைச் சேர்ந்த திருமதி.மாரியம்மாள் (வயது 51) க/பெ.மாரிமுத்து, எஸ் கொடிக்குளம், கூமாப்பட்டியைச் சேர்ந்த திருமதி.திருவாய்மொழி (வயது 48) க/பெ.ராமர் மற்றும் எம் சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த திருமதி.கலைச்செல்வி (வயது 35) க/பெ.விஜயகுமார் ஆகிய மூன்று நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திருமதி.பாக்கியலட்சுமி (வயது 55) க/பெ.துரைராஜ், திருமதி.கோமதி (வயது 55), திருமதி.பாத்திமுத்து (வயது 55) க/பெ.அப்துல் காதர், திருமதி.ராபியா பீவி (வயது 50) க/பெ.தீன்முகம்மது, திருமதி.ராமசுப்பு (வயது 43) க/பெ.அன்புசெல்வன், திருமதி.லட்சுமி (வயது 40) க/பெ.தங்கப்பாண்டியன், திருமதி.முனியம்மாள் (வயது 40), க/பெ.ஆறுமுகம் ஆகியோருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்"என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!