Tamilnadu

கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் தொல்லை.. தட்டி தூக்கிய போலீஸ்.. கம்பி எண்ணும் அதிமுக நிர்வாகி - நடந்தது?

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே மேலப்பாதி மேலத்தெருவை சேர்ந்த தேவேந்திரன் மகன் அப்பு (எ) தினகரன் (28). அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகியாக இருக்கும் இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

அதே போல் மேலபாதி சிவன் கோயில் தெருவில் வசிக்கும் 23 வயதான இளம்பெண் ஒருவர், கீழையூர் சத்திரம் பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இந்த சூழலில் கடந்த 20-ம் தேதி தனது நண்பரின் குழந்தைக்கு பிறந்தநாள் என்று கூறி மேக்கப் போட வேண்டும் என்று அந்த பெண்ணை அழைத்துள்ளார். அந்த பெண்ணும் அதிமுக நிர்வாகியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அந்த சமயத்தில் செம்பனார்கோயில் ரயிலடி பகுதியில், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்ற அதிமுக நிர்வாகி, அவரை இறக்கிவிட்டுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வீடு இருந்ததால் சந்தேகம் அடைந்த அந்த இளம்பெண், வீட்டிற்குள் செல்ல மறுத்துள்ளார்.

அப்போது அதிமுக நிர்வாகி அப்பு, அந்த பெண்ணிடம் அத்துமீறியுள்ளார். இதனால் கத்தி கூச்சலிட்ட அந்த பெண்ணிடம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து தைரியத்தை வரவைத்துக்கொண்ட அந்த பெண், அவரை தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

தொடர்ந்து தப்பியோடிய பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீசார், அதிமுக நிர்வாகி தினகரனை நேற்று மாலை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “என்.எல்.சி உடன்பிறப்புகளுக்கு ஓர் வேண்டுகோள்!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!