Tamilnadu
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் : போக்குவரத்துத் துறைக்கான 23 அறிவிப்புகள் என்னென்ன?
தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த மார்ச் 14-ம் தேதி தொடங்கி, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு துறைகள் மீதான கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தும், புதிய அறிவிப்புகள் வெளியிட்டும் வருகின்றனர்.
அந்த வகையில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் போக்குவரத்துத் துறைக்கு அமைச்சர் சிவசங்கர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்புகள் வருமாறு :
1) மாநகர் போக்குவரத்துக் கழகம், சென்னையின்கீழ் செயல்படும் ஆறு பேருந்து முனையங்களை மேம்படுத்துதல்
2) அரசு நிதி உதவிமூலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்கி தீர்வு காணல்
3) பணிமனைகளில் பேருந்துகளை சுத்தம் செய்ய தேவையான நவீன இயந்திரங்கள் மற்றும் கருவிகள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல்
4) பேருந்து பணிமனைகளில் பணியாளர்கள் பயன்படுத்தும் ஒப்பனை அறைகளை 100 பணிமனைகளில் மேம்படுத்துதல்
5) அதிநவீன உபகரணங்கள் மற்றும் கருவிகள்மூலம் தொழில்நுட்ப உற்பத்தித்திறனை பணிமனைகளில் அதிகரித்தல்
6) தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் 50 பேருந்து பணிமனைகளில் உள்கட்டமைப்புகளை புதுப்பித்தல்
7) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் 100 பேருந்து பணிமனைகளில், நைட்ரஜன் காற்று நிரப்பும் இயந்திரங்களை அமைத்து உருளிப்பட்டை (Tyre) பராமரிப்பை மேம்படுத்துதல்
8) போக்குவரத்துக் கழக பேருந்துகளில் நான்கு வெளிப்புற கேமராக்களை பொருத்துவதன்மூலம் விபத்துகளைத் தடுத்தல்
9) 500 பேருந்துகளில் ஓட்டுநர் கண்காணிப்பு அமைப்பு (Driver Monitoring System) மூலம் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முன்னோடி முயற்சி
10) மோட்டார் வாகன பராமரிப்புத் துறையின் 20 அரசு தானியங்கி பணிமனைகள் மற்றும் இயக்குநர் அலுவலகத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும்பொருட்டு LED திரை வசதியுடன்கூடிய கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) பொருத்துதல்
11) தஞ்சாவூர், திருநெல்வேலி, ஈரோடு, திண்டுக்கல் மற்றும் தருமபுரியில் உள்ள அரசு தானியங்கி பணிமனைகளை நவீனமயமாக்குதல் மற்றும் தரம் உயர்த்துதல்
12) திருச்சி மற்றும் சேலத்தில் இயங்கிவரும் ஓட்டுநர் புத்தாக்கப் பயிற்சி மையத்தில் கலந்துகொள்ளும் அரசுத் துறை ஓட்டுநர்களுக்கு மூன்று நாட்கள் தங்கி பயிற்சியில் கலந்து கொள்வதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துதல்
13) புதிய நவீனரக வாகனங்களின் மின்னணு பழுதுகளை கண்டறியும் கருவிகளை மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் கோயம்புத்தூர், திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள அரசு தானியங்கி பணிமனைகளுக்கு கொள்முதல் செய்து வழங்குதல்
14) காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு ஓட்டுநர் தேர்வுத் தளத்துடன்கூடிய சொந்தக் கட்டடம் கட்டுதல். மதிப்பீடு ரூ.727.00 இலட்சம்.
15) மின்னணு அலுவலகம் மற்றும் மின்னணு ஆளுமை பணிக்காக புதிதாக 596 எண்ணிக்கையில் கணினிகள் 269 எண்ணிக்கையில் அச்சுப் பொறிகள் (பிரிண்டர்) மற்றும் 269 எண்ணிக்கையில் ஊடுகதிர் கருவிகள் (ஸ்கேனர்) கொள்முதல் செய்தல். இப்பணிகள் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை வாயிலாக மேற்கொள்ளப்படும். மதிப்பீடு ரூ.488.00 இலட்சம்.
16) தமிழ்நாட்டிலுள்ள 5 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களை மாதிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களாக தரம் உயர்த்துதல்
17) போக்குவரத்துத் துறையின் சோதனைச் சாவடிகளில் மின் செயலாக்கம் மற்றும் ANPR கேமரா, அதிவேகம் கண்டறியும் கருவி, உடலோடு ஒட்டிய கேமரா போன்ற நவீன தொழிநுட்பங்களுடன்கூடிய முன்னோடித் திட்டத்தினை உருவாக்குதல். மதிப்பீடு ரூ.600.00 இலட்சம்.
18) வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் 5 மாதிரி தானியங்கி வாகன சோதனை நிலையங்கள் (ATS) அமைத்தல். மதிப்பீடு ரூ.2,540 இலட்சம்.
19) போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகத்தில் “நூலகம்” அமைத்தல். மதிப்பீடு ரூ.50.00 இலட்சம்.
20) “விபத்தில்லா தமிழ்நாடு” என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், அனைத்து பயன்பாட்டு துறைகளுடன் ஒருங்கிணைந்து, மாநிலத்தில் 100 அதிக விபத்துகள் நிகழும் சாலைகளைக் கண்டறிதல்
21) திறன்மிக்க ஓட்டுநர்களை உருவாக்கும் நோக்கத்தில் சேலம் மாவட்டம், தேவண்ணகவுண்டனூர் கிராமத்தில் ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை அமைத்தல். மதிப்பீடு ரூ.1,725.00 இலட்சம்.
23) சாலை விபத்துகளைத் தடுப்பதற்கும் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்கவும் 2025-2026 ஆம் ஆண்டிற்கு சாலைப் பாதுகாப்பு நிதி ரூ.65 கோடியிலிருந்து ரூ.130 கோடியாக உயர்த்தப்படும். மதிப்பீடு ரூ.130.00 கோடி.
Also Read
-
“ஒருவேளை விஜய் வட இந்தியாவில் பிறந்திருந்தால்...” - கழக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தாக்கு!
-
முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!