Tamilnadu
”அமித்ஷா அருகே மௌன சாமியாக அமர்ந்திருந்த பழனிசாமி” : வைகோ பேட்டி!
அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் கூட்டணி வைத்து இருக்கிறார்கள். பா.ஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று சொன்ன எடப்பாடிதான் இன்று கூட்டணி வைத்து இருக்கிறார். செங்கோட்டையன், இரண்டு முறை தனியாக ஒன்றிய அமைச்சர் சந்தித்தார். அதேபோல் எடப்பாடியும் டெல்லி சொன்றார். தற்போது அமித்ஷா சென்னை வந்த நிலையில் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமைகிறது என்றால், அவர் பேசி இருக்க வேண்டாமா? ஆனால் அவர் பேச அனுமதிக்கப்பட வில்லை. அவர் பேச அனுமதித்து இருந்தால் அது கூட்டணியில் ஆரோக்கியமானதாக இருந்து இருக்கும். ஆனால் எடப்பாடி பழனிசாமி மௌன சாமியாக அமர்ந்திருந்தார்.
இந்த கூட்டணி தொடருமா? என்பது அவர்களுக்கே தெரியாது. நீட், மும்மொழி கொள்கை உள்ளிட்ட விவகாரத்தில் கருத்து வேறுபாடுகள் காரணத்தில் இக்கூட்டணி உடைய வாய்ப்பு உள்ளது. இந்த கூட்டணி நீடித்தாலும், உடன் சில கட்சிகள் சேர்ந்தாலும் தி.மு.க தலைமையில் உள்ள கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெறும் .
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!