தமிழ்நாடு

அமித்ஷாவிடம் அ.தி.மு.கவை அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி : ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்!

சுய லாபத்திற்காக அ.தி.மு.கவை அடகு வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.

அமித்ஷாவிடம் அ.தி.மு.கவை அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி : ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சுய லாபத்திற்காக அ.தி.மு.கவை எடப்பாடி பழனிசாமி அடகு வைத்திருக்கிறார். அ.தி.மு.க தொண்டர்களை இனி யாரும் திட்டக்கூடாது. பாவம் அவர்கள், அரசியல் அனாதையாகி வெதும்பி நிற்கிறார்கள் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.

தென் சென்னையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் பேசிய அவர், ”ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்து இருக்கிறார். இவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. மேலும் நமக்கு தர வேண்டிய நீதியையும் கொடுக்கவில்லை. பா.ஜ.க.

இஸ்லாமிய மக்களுக்கெல்லாம் ஒரு மிகப்பெரிய துரோகம் செய்து இஸ்லாமியர்கள் அனுபவித்த அத்தனை சொத்துக்கள்  அபகரித்துள்ளது.

அதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் போடவே அவர் இங்கு வந்து இருக்கிறார். அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அடகுவைத்துவிட்டார்.

அதிமுக தொண்டர்களை யாரும் திட்டக்கூடாது. பாவம் அவர்கள், அரசியல் அனாதையாக்கி வெதும்பி இருக்கிறார்கள். வக்ஃப் சட்டத்தை கொண்டுவந்து இஸ்லாமிய மக்களுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு துரோகம் செய்துள்ளது. அவர்களது சொத்துக்களை அபகரிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார். மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை இந்த அரசு கொண்டுவந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதனால் இந்த அரசை மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

2019 ஆம் ஆண்டு தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த கூட்டணிதான் இன்றுவரை தொடர்ந்து வருகிறது. 2026 தேர்தலிலும் தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றியை பெறும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories