Tamilnadu
சென்னைக்கான 15 புதிய திட்டங்கள் : சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட அமைச்சர் சேகர்பாபு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கேர்பாபு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
1.சென்னை பாரதி பெண்கள் கல்லூரி கூடுதல் வசதிகளோடு ரூ. 25 கோடியில் மேம்படுத்தப்படும்.
2. சென்னையில் 9 அரசுப் பள்ளிகள் ரூ. 25 கோடியில் மேம்படுத்தப்படும்.
3. சென்னையில் 6 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் ரூ. 5 கோடியில் மேம்படுத்தப்படும்.
4. சென்னையில் 15 முதல்வர் படைப்பகங்கள் ரூ. 40 கோடியில் அமைக்கப்படும்.
5. பிராட்வே பிரகாசம் சாலையில் அதிநவீன பொது நூலகம் ரூ. 30 கோடியில் அமைக்கப்படும்.
6. சென்னை மாநகரில் 5 அரங்குகள் மற்றும் மைதானங்கள் ரூ. 37 கோடியில் மேம்படுத்தப்படும்.
7. வடசென்னையில் 4 இடங்களில் பேருந்து நிறுத்தங்கள் ரூ. 8 கோடியில் அமைக்கப்படும்.
8. சென்னையில் 7 பன்னோக்கு மையங்கள் ரூ. 45 கோடியில் அமைக்கப்படும்.
9. சென்னையில் 6 அமுதம் அங்காடிகள் ரூ.22 கோடியில் அமைக்கப்படும்.
10. சென்னை வண்டலூர் கீரப்பாக்கத்தில் ரூ. 11 கோடியில் உணவுப் பொருள் கிடங்கு அமைக்கப்படும்.
11. இராயபுரம், சஞ்சீவிராயன் பேட்டை அரசு மகப்பேறு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் ரூ. 6 கோடியில் அமைக்கப்படும்.
12. இராயபுரம், பனைமரத் தொட்டி அரசு மகப்பேறு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் ரூ. 4 கோடியில் அமைக்கப்படும்.
13. கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் ரூ. 10 கோடியில் மேம்படுத்தப்படும்.
14. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் ரூ. 21 கோடியில் மேம்படுத்தப்படும்.
15. சென்னை குரோம்பேட்டையில் ரூ. 10 கோடியில் நடை மேம்பாலம் அமைக்கப்படும்.
Also Read
-
தமிழ்நாடுக்கு திட்டங்களும் இல்லை! சிலிண்டரும் இல்லை! - தி.மு.க கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
-
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குக: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் 25 இலட்சம் பேருக்கு பட்டா! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்!
-
“ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறக்கூடாது என்பது கொடூரமான சர்வாதிகார மனோபாவம்!” : முரசொலி தலையங்கம்!
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!