Tamilnadu

பொருளாதார அறிக்கை: “மிகப்பெரிய வளர்ச்சியை நாம் பெற்றிருக்கிறோம்” - அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!

பொருளாதார வளர்ச்சியில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 9.69% ஆக உயர்ந்துள்ளது. 2023-24-ம் நிதியாண்டில் ரூ.15,71,368 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, 2024-25-ம் நிதியாண்டில் ரூ.17,23,698 கோடியாக அதிகரித்துள்ளது என்று ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டின் இந்த சாதனைக்கு பொருளாதார அறிஞர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியபடியே, ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கை தமிழ்நாடு விரைவில் எட்டும் என்று பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் 9.69 சதவிகிதம் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பது கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் என்று சொன்னால், இந்த வளர்ச்சி நிச்சயமாக எட்டப்பட முடியாத ஒரு வளர்ச்சி என்று தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று (ஏப்.05) தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது :-

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில், தமிழ்நாடு மிக முக்கியமான பங்களிப்பினை வகிக்கிறது என்பதை நீங்கள் மிக நன்றாக அறிவீர்கள். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்திற்கு நாம் 9 சதவீதம் அளித்து கொண்டு வரக்கூடிய நிலையில், இன்றைக்கு ஒன்றிய அரசினுடைய Statistics and Programe Implementation துறையின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கக்கூடிய ஆய்வறிக்கை வந்திருக்கிறது. அந்த ஆய்வறிக்கையின் படி, நிலைத்த விலை விகிதங்களில் (constant prices) தமிழ்நாட்டினுடைய வளர்ச்சி என்பது இன்றைக்கு 9.69 சதவீதமாக அதிகரித்திருக்கிறது என்று அந்த அறிக்கை தெரிவித்திருப்பது மிக முக்கியமான மிக சிறப்பான ஒன்று என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

9.69 சதவிகிதம் என்பது கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் என்று சொன்னால், இந்த வளர்ச்சி நிச்சயமாக எட்டப்பட முடியாத ஒரு வளர்ச்சி. நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய தெளிந்த வழிகாட்டுதல்கள்.

முதலமைச்சர் அவர்கள் கடந்த 4 ஆண்டுகளில் எடுத்து இருக்கக்கூடிய பல்வேறு முயற்சிகளின் காரணமாக, நமக்கு இந்த மிகப்பெரிய வளர்ச்சி கிடைத்திருக்கிறது. அதன் வகையில் நீங்கள் பார்த்தீர்கள் என்று சொன்னால், கடந்த ஆண்டில், நம்முடைய பொருளாதாரம் என்பது 15.73 லட்சம் கோடியாக இருந்த அந்த பொருளாதாரம், இன்றைக்கு 17.23 லட்சமாக இந்த ஆண்டிலே அது உயர இருக்கின்றது.

இந்த 9.69 சதவிகிதத்தில் (constant price) வரக்கூடிய இந்த வளர்ச்சி என்பது நீங்கள் nominal price-லிருந்து நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள் என்று சொன்னால், அதாவது பணவீக்கத்தை (inflation) உருவாக்கி. நீங்கள் எடுத்துக் கொண்டால் அது 14 சதவீதமாக இருக்கும். பணம் நீக்கம் இல்லாமல் அந்த constant price-ல் எடுத்துக்கொண்டால் 9.69 சதவீதமாகும். இது தமிழ்நாட்டில் அரசு இந்த ஆண்டு நம்முடைய பட்ஜெட்டைக் கொடுப்பதற்கு முன்பாக Economic Survey ரிப்போர்ட் ஒன்றை நாம் வெளியிட்டிருந்தோம்.

அந்த Economic Survey ரிப்போர்ட்டில் நாம் என்ன வளர்ச்சி விகிதத்தை குறிப்பிட்டிருந்தோமோ அந்த வளர்ச்சி விகிதத்தை தொடக்கூடிய அளவிற்கு இது வந்திருக்கிறது. இந்த வளர்ச்சி விகிதம் என்பது அதில் சுட்டிக்காட்டியிருப்பது போல, 8 சதவிகிதம் நாம் அதை சுட்டிக்காட்டி இருந்தோம். ஆனால், இன்றைக்கு 9.69 சதவீதமாக அந்த வளர்ச்சி விகிதமாக கூடியிருக்கிறது. அதைப்போல, மதிப்பிற்குரிய ரங்கராஜன் அவர்கள் ஒரு சிறந்த பொருளாதார நிபுணர், அதைப்போல, கே.ஆர்.சண்முகம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லி இருப்பது போல, அது 9.3 சதவீதமாக இருக்கும் என்று அவர்கள் சொல்லியிருந்தார்கள். அதையும் சிறப்பாக செய்து நாம் 9.69 சதவிகிதமாக நாம் இன்றைக்கு வந்திருக்கிறோம்.

இதில் மூன்று முக்கியமான துறைகளில் முதலாவதாக வகிக்கக்கூடிய விவசாயம், இரண்டாவது துறையாக இருக்கக்கூடிய நம்முடைய உற்பத்தித் துறையாக இருந்தாலும் சரி அல்லது மூன்றாவது துறையாக இருக்கக்கூடிய நம்முடைய சர்வீசஸ் துறையாக இருந்தாலும் சரி, இவற்றில் விகிதங்களை பார்க்கின்றபோது சர்வீசஸ் துறை நமக்கு மிகுந்த பங்களிப்பினை அளித்திருக்கிறது. அதைப்போல, நம்முடைய உற்பத்தித் துறையும் அதற்கான குறிப்பிடத் தகுந்த அளவில் ஒரு பங்களிப்பை அளித்திருக்கிறது.

இந்த வளர்ச்சி என்பது இந்த விகிதத்தில் நாம் செல்கிறோம் என்று சொன்னால், நாம் ஏற்கனவே நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சொன்னதைப் போல, நாம் 2030-ஆம் ஆண்டில் ஒரு ட்ரில்லியன் டாலர் economy-யை நாம் பெறக் கூடிய அளவிற்கு இந்த வளர்ச்சி விகிதம் நம்மை இட்டுச்செல்லும். இது முதலமைச்சர் அவர்களுடைய Vision – அவருடைய தொலைநோக்குப் பார்வை. அவர் எடுத்திருக்கக்கூடிய பல்வேறு முயற்சிகள் - தமிழ்நாட்டினுடைய பொருளாதார மேம்பாட்டிற்கு அவர்கள் செய்திருக்கக் கூடிய தொழில் முதலீடுகளை நம்முடைய நாட்டுக்கு கொண்டு வருவது - உள்ளூரிலேயே தொழில் செய்வதை மிகுந்த எளிமைப்படுத்துகின்ற வகையில் அவர் எடுத்திருக்கின்ற முயற்சிகளுக்கு இது மிகுந்த ஒரு சான்றாக அமைந்திருக்கிறது.

மக்களுடைய நலவாழ்வில் அக்கறை கொண்டு அவர் எடுத்திருக்கக்கூடிய இந்த முயற்சிகள் எல்லோரையும் ஒருங்கிணைத்திருக்கக்கூடிய அந்த வளர்ச்சி என்பதும் இந்த பொருளாதார வளர்ச்சிக்கு அடிகோளாக மாறி இருக்கிறது என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதன் வாயிலாக, நம்முடைய ஒட்டுமொத்த பொருளாதாரம் என்பது இன்றைக்கு மிகப்பெரிய வளர்ச்சியை நாம் பெற்றிருக்கிறோம் என்பதை செய்தியாளர்களை சந்திக்கும் வாயிலாக நான் மிகுந்த மகிழ்ச்சியோடு உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Also Read: உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : சிறப்புகள் என்ன ?