Tamilnadu
ஜவுளி மற்றும் செயற்கை இழைகள் குறித்தான ஆராய்ச்சிக்கான ரூ.25 கோடி நிதியுதவி.. இணையதளம் தொடக்கம்!
ஜவுளி மற்றும் ஆடைத் தொழிலின் பலதரப்பட்ட அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன், தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறையினை இரண்டாகப் பிரித்து ஜவுளி மற்றும் ஆடைத்தொழில் பிரிவுக்கென தனியே "துணிநூல் துறை" 23.10.2021 அன்று துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்களின் 2022-2023 ஆம் ஆண்டுக்கான அறிவிப்பிற்கிணங்க துணிநூல் துறைக்கென பிரத்யேகமாக www.tntextiles.tn.gov.in என்ற இணையதளம் 15.03.2024 அன்று தொடங்கப்பட்டது.
இணையதளமானது ஜவுளித் துறை தொடர்பான அறிவிப்புகள், பல்வேறு அரசு முயற்சிகள், அரசின் கொள்கைகள் ஆகியவை அனைத்து தரப்பு மக்களையும் சேரும் நோக்கில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் பயன்படுத்தும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசின் வழிகாட்டுதலின்படி துணிநூல் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களை பயன்படுத்திட ஏதுவாக ஒற்றை சாளர இணையதள வசதி (Single Online Portal) உருவாக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து. 2024 25 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிவிப்பின்படி (Budget Announcement) தொழில்நுட்ப ஜவுளி மற்றும் செயற்கை இழையின் ஆராய்ச்சி மற்றும் வணிக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு ரூபாய் 25 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியுதவினை பெரும் பொருட்டு, ஆராய்ச்சி நிறுவனங்கள் (Research Institutions) மற்றும் தொழில் நிறுவனங்கள் இலகுவாக விண்ணப்பிக்க ஏதுவாக ஒற்றை சாளர இணையதள வசதியினை (Single Online Portal) கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் நேற்று (04.04.2025) தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், துணிநூல் துறை இயக்குநர் ஆர்.லலிதா, இ.ஆ.ப மற்றும் துணிநூல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
துணிநூல் துறையின் கீழ் தொழில்நுட்ப ஜவுளி மற்றும் செயற்கை இழைகள் குறித்தான ஆராய்ச்சி மற்றும் வணிக மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு ரூபாய் 25 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியுதவி பெரும் பொருட்டு ஆராய்ச்சி நிறுவனங்கள் (Research Institutes) மற்றும் தொழில் நிறுவனங்கள் இலகுவாக விண்ணப்பித்திட ஏதுவாக ஒற்றைச் சாளர இணையதள வசதியினை (Single Online Portal) கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் நேற்று (04.04.2025) துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்வில், துணிநூல் துறை இயக்குநர், ஆர். லலிதா,இ.ஆ.ப., மற்றும் துணிநூல் துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!