Tamilnadu

ரூ.1000 : மகளிருக்கு மகிழ்ச்சியான செய்தி சொன்ன அமைச்சர் தங்கம் தென்னரசு!

தி.மு.க ஆட்சியமைத்த பிறகு தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வரப்படுகிறது. அந்த வகையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு கடந்த ஆண்டு (2023) அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் தேதி இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

முதலில் 1 கோடி பேர் என இலக்கு நிர்ணயித்தாலும், அரசு அறிவித்த பொருளாதாரத் தகுதிகளுக்குள் வரும் அனைவரையும் பயனாளர்களாக இணைக்க முடிவெடுக்கப்பட்டது. முதலில் 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேர் மட்டுமே பயனாளர்களாக இருந்த நிலையில், அடுத்தடுத்து விண்ணப்பித்தவர்களும் பயனாளர்களாக இணைக்கப்பட்டு வருகின்றனர். நிராகரிக்கப்பட்டவர்களும் மேல்முறையீடு செய்ய வழிவகைகள் செய்யப்பட்டன.

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி வாய்ந்தவர்களுக்கு இன்னும் மூன்று மாத காலத்தில் விண்ணப்பம் பெறப்பட்டு, அதில் தகுதி உடைய அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

Also Read: ”உலக அளவில் கவனம் ஈர்த்த மு.க.ஸ்டாலின்” : The Straits Times-ல் முதலமைச்சரை பாராட்டி கட்டுரை வெளியீடு!