Tamilnadu

கோடை வெயிலில் இருந்து தப்பிக்க செய்யவேண்டியவை என்ன? செய்யக் கூடாதவை என்ன ?

வெப்ப பாதிப்புகளிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கோடைக்காலம் தொடங்கியிருப்பதால் வெப்ப பாதிப்பு அதிகரிக்கும் என்கின்ற வகையில் தமிழ்நாட்டில் பெரும்பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் சராசரி வெப்பநிலை அதிகரிக்க கூடும் என்கின்ற அச்சநிலை இருக்கின்றது. எனவே பொதுமக்கள் உயர்வெப்ப நிலையிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் 03 மணி வரை தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

அந்தவகையில், கோடைகால கடுமையான வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க

செய்ய வேண்டியவை :

1. உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும்.

2. அவசியமான பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது குடிநீரை கையுடன் எடுத்துச் செல்லுங்கள்.

3. ஓ.ஆர்.எஸ் (ORS), எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்கவும்.

4. இந்த பருவகாலத்தில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவை உண்ணுங்கள்.

5. நல்ல காற்றோட்டம் உள்ள மற்றும் வெப்பம் தணிந்த இடங்களில் இருக்கவும்.

6. மெல்லிய, தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும்.

7. வெளியில் செல்லும் போது காலணிகளை அணியவும்.

8. மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது குடை கொண்டு செல்லவும்.

9. உடல் சோர்வாகவோ, மயக்கமாகவோ உணரும் பொழுது உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும்.

செய்யக் கூடாதவை :

1. வெயில் காலங்களில் வெறுங்காலுடன் வெளியே செல்லாதீர்கள்.

2. சிறிய குழந்தைகள், கர்பிணிகள், முதியோர்கள் அதிக வெப்பத்தில், மதிய வேளையில் (12 மணி முதல் 3 மணி வரை) வெளியே செல்வதை தவிர்க்கவும்.

3. செயற்கை குளிர்பானங்களான காபி, டீ, மது போன்ற பானங்களை அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

4. நான்கு சக்கர வாகனங்களில் அமர்ந்தவுடன் உடனடியாக ஏசி பயன்படுத்தாமல் சிறிது நேரம் கண்ணாடி கதவுகளை இறக்கி வைத்துவிட்டு  இயற்கை காற்றோட்டத்திற்கு பிறகு குளிர்சாதன வசதிகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது.

இதய நோயாளிகள், இரத்த அழுத்தம் கொண்டவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக வெப்பத்தால் பாதிக்கப்படக் கூடும். அவர்களை கூடுதல் கவனத்துடன் நல்லது.

Also Read: “தர்ப்பூசணி பழத்தில் ஊசி செலுத்தினால் கடும் நடவடிக்கை” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடும் எச்சரிக்கை!