Tamilnadu

'கவனமாக இருங்கள்' - அதிமுகவை எச்சரித்த அமைச்சர் தங்கம் தென்னரசு : சிரித்த வானதி சீனிவாசன்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை, அடுத்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இன்று சட்டப்பேரவையில், வினா - விடை நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து,நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றினார். அப்போது, ”அ.திமுக தொண்டர்களின் எதிர்காலத்தை எங்கோ இருந்து ஒருவர் சாணக்கியர் அளவில் கணக்கு போட்டுக்கொண்டு இருக்கிறார்.

மடிக்கணினி விவகாரத்தில் கவன குறைவாக இருந்தது போல், மடியில் உள்ள கனத்தை பறித்து கொள்ள நினைப்பவர்களிடம் இருந்து கவனமாக இருக்க வேண்டும்.” என அமைச்சர் பேசினார்.

அப்போது பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், அமைச்சர் சொன்னதை கேட்டு சிரித்துள்ளார். இதை கவனித்த அமைச்சர் உடனே, ”நான் சொன்னதை கேட்டு உறுப்பினர் வானதி சீனிவாசன் மிக மகிழ்ச்சியுடன் சிரிக்கிறார். பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டது" என கூறினார்.

இப்படி அமைச்சர் கூறிய அடித்து நொடியே அவையில் இருந்த அனைவரும் சரித்தனர். இதனால் சில நிமிடம் அவையில் சிரிப்பொலி எழுந்தது.

அதிமுகவை, பா.ஜ.க தங்களது கட்டுப்பாட்டிவைத்துக் கொண்டு அவர்களது சொல்லுக்கு தலையாட்டும் பொம்மையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக சொல்லப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தமிழ்நாடு சட்டப்பேரவை : MLA-க்கள் எழுப்பிய கேள்வி - ’நச்’ என்று பதில் அளித்த அமைச்சர்கள்!